• May 02 2024

இலங்கையில் புடவைக்கே செலவாகும் ஆசிரியர்களின் சம்பளம்! – ஆய்வில் வெளிவந்த தகவல்

Chithra / Dec 1st 2022, 11:07 am
image

Advertisement


ஒரு ஆசிரியரின் சம்பளத்தில் 15 சதவீதம் கல்வி அமைச்சின் ஆடைக் குறியீட்டிற்கு இணங்க புடவைகள் மற்றும் அது தொடர்பான ஆடைகளை வாங்குவதற்கு செலவிடப்படுகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஜப்பானின் கியூஷூ பல்கலைக்கழகத்தின் கலாநிதிப் பட்டதாரியான லஸ்னி புத்திபாஷிகா ஜயசூரிய நடத்திய ஆய்வில், இலங்கையில் ஆசிரியர்கள் தங்களது சம்பளத்தில் கணிசமான பகுதியைத் தங்கள் ஆடைகளுக்காக மட்டுமே செலவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, ஆசிரியர்கள் சேலைக்காக நிறைய பணம் செலவழிக்கிறார்கள் என்றும் ஒரு ஆசிரியரின் சம்பளத்தில் 15வீதம் சேலை தொடர்பான செலவுகளுக்கு செலவிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களில் இலங்கைப் பெண் ஆசிரியர்களின் ஆடைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

புடவை என்பது ஆறு யார் துணி மட்டுமல்ல அதற்கு புடவை ஜாக்கெட், லைனிங் துணி, தையல் கட்டணம், புடவைக்கு ஏற்ற கீழ்பாவாடை மற்றும் காலணிகள் என்பனவும் வாங்க வேண்டுமென அவர் விளக்கியுள்ளார்.

மேலும் புடவையை துவைப்பது, இஸ்திரி போடுவது மற்றும் அணிவதற்கும் கணிசமான அளவு நேரம் எடுக்கும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் புடவைக்கே செலவாகும் ஆசிரியர்களின் சம்பளம் – ஆய்வில் வெளிவந்த தகவல் ஒரு ஆசிரியரின் சம்பளத்தில் 15 சதவீதம் கல்வி அமைச்சின் ஆடைக் குறியீட்டிற்கு இணங்க புடவைகள் மற்றும் அது தொடர்பான ஆடைகளை வாங்குவதற்கு செலவிடப்படுகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.ஜப்பானின் கியூஷூ பல்கலைக்கழகத்தின் கலாநிதிப் பட்டதாரியான லஸ்னி புத்திபாஷிகா ஜயசூரிய நடத்திய ஆய்வில், இலங்கையில் ஆசிரியர்கள் தங்களது சம்பளத்தில் கணிசமான பகுதியைத் தங்கள் ஆடைகளுக்காக மட்டுமே செலவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.அதன்படி, ஆசிரியர்கள் சேலைக்காக நிறைய பணம் செலவழிக்கிறார்கள் என்றும் ஒரு ஆசிரியரின் சம்பளத்தில் 15வீதம் சேலை தொடர்பான செலவுகளுக்கு செலவிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களில் இலங்கைப் பெண் ஆசிரியர்களின் ஆடைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.புடவை என்பது ஆறு யார் துணி மட்டுமல்ல அதற்கு புடவை ஜாக்கெட், லைனிங் துணி, தையல் கட்டணம், புடவைக்கு ஏற்ற கீழ்பாவாடை மற்றும் காலணிகள் என்பனவும் வாங்க வேண்டுமென அவர் விளக்கியுள்ளார்.மேலும் புடவையை துவைப்பது, இஸ்திரி போடுவது மற்றும் அணிவதற்கும் கணிசமான அளவு நேரம் எடுக்கும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement