• May 20 2024

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு திருமலையில் மர நடுகை நிகழ்வு..!samugammedia

Sharmi / May 30th 2023, 1:01 pm
image

Advertisement

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானம் மற்றும் மர நடுகை நிகழ்வு இன்று(30) திருகோணமலை கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே. எஸ்.அருள்ராஜ் கலந்து கொண்டார்.

ஜூன் மாதம் 5 ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள  சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு  இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, கொட்பே மீனவ துறைமுகம் ஆகியன இணைந்து இந்நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தன.

பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசடைதலை ஒழித்தல்  என்பது இம்முறை அனுஷ்டிக்கப்படும் சுற்றாடல் தின தொனிப்பொருளாக உள்ளது.

பாலையூற்று கடற்கரையோரம், கொட்பே மீனவ துறைமுகம் உள்ளிட்ட பிரதேசத்தில் அதிகளவான பிளாஸ்டிக் பொருட்கள் ஒன்று சேர்வதாகவும் இதனை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு இவ்விடயத்தினை கொண்டு வந்ததனை அடுத்தே அரசாங்க அதிபரின் ஆலோசனையின்பேரில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதிக பிளாஸ்டிக் வெளியேற்றம் காரணமாக கடல்வாழ் உயிரினம் , கடல் வளம் மற்றும் மனிதனும் பாதிக்கப்படுவதாகவும் பிளாஸ்டிக் சூழலுக்கு வெளியேற்றலில் உலகளவில் இலங்கை 5 ம் இடத்தில் இருப்பதாக இதன்போது மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் துறைசார் அதிகாரிகள், மீனவசங்கங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு திருமலையில் மர நடுகை நிகழ்வு.samugammedia சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானம் மற்றும் மர நடுகை நிகழ்வு இன்று(30) திருகோணமலை கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது.பிரதம அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே. எஸ்.அருள்ராஜ் கலந்து கொண்டார்.ஜூன் மாதம் 5 ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள  சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு  இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, கொட்பே மீனவ துறைமுகம் ஆகியன இணைந்து இந்நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தன.பிளாஸ்டிக் மூலம் ஏற்படும் மாசடைதலை ஒழித்தல்  என்பது இம்முறை அனுஷ்டிக்கப்படும் சுற்றாடல் தின தொனிப்பொருளாக உள்ளது.பாலையூற்று கடற்கரையோரம், கொட்பே மீனவ துறைமுகம் உள்ளிட்ட பிரதேசத்தில் அதிகளவான பிளாஸ்டிக் பொருட்கள் ஒன்று சேர்வதாகவும் இதனை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு இவ்விடயத்தினை கொண்டு வந்ததனை அடுத்தே அரசாங்க அதிபரின் ஆலோசனையின்பேரில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.அதிக பிளாஸ்டிக் வெளியேற்றம் காரணமாக கடல்வாழ் உயிரினம் , கடல் வளம் மற்றும் மனிதனும் பாதிக்கப்படுவதாகவும் பிளாஸ்டிக் சூழலுக்கு வெளியேற்றலில் உலகளவில் இலங்கை 5 ம் இடத்தில் இருப்பதாக இதன்போது மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் தெரிவித்தார்.இந்நிகழ்வில் துறைசார் அதிகாரிகள், மீனவசங்கங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement