• Jun 01 2025

முல்லைத்தீவில் கிரிக்கெட் வீர, வீராங்கனைகளுக்கு கௌரவிப்பு..!

shanuja / May 30th 2025, 11:56 pm
image

முல்லைத்தீவில் கடந்த 2024 ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டில் வெற்றியீட்டிய  வெற்றியாளர்கள் மற்றும் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு  முல்லைத்தீவில் நேற்று  இடம்பெற்றது. 


முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் அமைந்துள்ள உதயா தனியார் விருந்தினர் விடுதி  மண்டபத்தில்  குறித்த நிகழ்வு இடம்பெற்றது. 


2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரிக்கெட்  போட்டியில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டவர்கள், சிறந்த பந்து வீச்சு,சிறந்த துடுப்பாட்டம், ஆண்டுக்கான சிறந்த வீரர், மாகாண ரீதியில் சிறந்து விளங்கிய வீர வீராங்கனைகள், சிறந்த பயிற்றுவிப்பாளர்கள், வட மாகாண பிரீமியர் லீக் போட்டியில் விளையாடிய வீரர்கள் போன்ற பல்வேறு சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். 


நிகழ்வில்  முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் குணபாலன், முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி கற்கண்டு உதயசீலன், முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்களின் பொறுப்பதிகாரி முகுந்தன், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், பெற்றோர்கள்  துடுப்பாட்ட சங்கத்தின் உறுப்பினர்கள், மாவட்ட பயிற்றுவிப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


.

முல்லைத்தீவில் கிரிக்கெட் வீர, வீராங்கனைகளுக்கு கௌரவிப்பு. முல்லைத்தீவில் கடந்த 2024 ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டில் வெற்றியீட்டிய  வெற்றியாளர்கள் மற்றும் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு  முல்லைத்தீவில் நேற்று  இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் அமைந்துள்ள உதயா தனியார் விருந்தினர் விடுதி  மண்டபத்தில்  குறித்த நிகழ்வு இடம்பெற்றது. 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரிக்கெட்  போட்டியில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டவர்கள், சிறந்த பந்து வீச்சு,சிறந்த துடுப்பாட்டம், ஆண்டுக்கான சிறந்த வீரர், மாகாண ரீதியில் சிறந்து விளங்கிய வீர வீராங்கனைகள், சிறந்த பயிற்றுவிப்பாளர்கள், வட மாகாண பிரீமியர் லீக் போட்டியில் விளையாடிய வீரர்கள் போன்ற பல்வேறு சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில்  முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் குணபாலன், முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி கற்கண்டு உதயசீலன், முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்களின் பொறுப்பதிகாரி முகுந்தன், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், பெற்றோர்கள்  துடுப்பாட்ட சங்கத்தின் உறுப்பினர்கள், மாவட்ட பயிற்றுவிப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement