இந்தியாவின் திருச்சி விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டபயணிகள் முனையம் இன்று (11) முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த முனையமானது 60,723 சதுர மீற்றர் பரப்பளவில் இந்திய ரூபா 1,112 கோடியில் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஸ்ரீரங்கம் ஆலயத்தின் ராஜகோபுரத்தினை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் இந்து சமயம் சார் கடவுள்களின் சிற்பங்கள் பொறிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த முனையமானது கடந்த ஜனவரி 2 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்ட நிலையில் தொழில்நுட்ப ஒழுங்குபடுத்தல் பணிகள் முடிவடைந்து இன்று முதல் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.