திருச்சியில் இருந்து பலாலி செல்வதற்கான விமான சேவை இந்த மாதம் ஆரம்பிக்கப்படும் நிலையில் அதற்கான வசதிகள் ஒழுங்குபடுத்தப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றசசத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்
திருச்சியில் இருந்து பலாலி செல்வதற்கான விமான சேவை இந்த மாதம் ஆரம்பிக்கப்படுகிறது. அதைப்போன்று காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் செல்வதற்கான கப்பல் சேவை அவ்வப்போது இடையில் நிறுத்தப்படுகின்ற நிலைமை காணப்படுகிறது.
நாகப்பட்டினத்தில் இருந்து வருகை தருகின்ற பயணிகள் குறித்த வசதிகள் தொடர்பாக இந்திய அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
ஆனால் இங்கு பயணிகளை ஏற்றும் வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.
அதனை நவீனமயப்படுத்தி பயணிகள் முனையத்தை புனரமைக்க வேண்டும். பயணிகளுக்கான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எனத்தெரிவித்தார்.
மேலும் ஒலுவில் துறைமுகம், ஆரம்பத்தில் வர்த்தகத்துறை சார்ந்த துறைமுகமாக இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், அந்த பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இந்த ஒலுவில் துறைமுகத்தை மீண்டும் திறத்தல் என்பது கடல் அரிப்புக்கு வழிகோலும் என்கின்ற ஒரு அச்சம் மக்களிடம் காணப்படுவதால் அந்த அச்சத்தை போக்குவதற்கான திட்டம் ஒன்றை வகுத்து அந்த துறைமுகத்தை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் ஆரம்பமாகும் திருச்சி - பலாலி விமான சேவை - சபையில் ரவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கை திருச்சியில் இருந்து பலாலி செல்வதற்கான விமான சேவை இந்த மாதம் ஆரம்பிக்கப்படும் நிலையில் அதற்கான வசதிகள் ஒழுங்குபடுத்தப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றசசத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில் திருச்சியில் இருந்து பலாலி செல்வதற்கான விமான சேவை இந்த மாதம் ஆரம்பிக்கப்படுகிறது. அதைப்போன்று காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் செல்வதற்கான கப்பல் சேவை அவ்வப்போது இடையில் நிறுத்தப்படுகின்ற நிலைமை காணப்படுகிறது.நாகப்பட்டினத்தில் இருந்து வருகை தருகின்ற பயணிகள் குறித்த வசதிகள் தொடர்பாக இந்திய அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ஆனால் இங்கு பயணிகளை ஏற்றும் வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். அதனை நவீனமயப்படுத்தி பயணிகள் முனையத்தை புனரமைக்க வேண்டும். பயணிகளுக்கான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எனத்தெரிவித்தார்.மேலும் ஒலுவில் துறைமுகம், ஆரம்பத்தில் வர்த்தகத்துறை சார்ந்த துறைமுகமாக இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், அந்த பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இந்த ஒலுவில் துறைமுகத்தை மீண்டும் திறத்தல் என்பது கடல் அரிப்புக்கு வழிகோலும் என்கின்ற ஒரு அச்சம் மக்களிடம் காணப்படுவதால் அந்த அச்சத்தை போக்குவதற்கான திட்டம் ஒன்றை வகுத்து அந்த துறைமுகத்தை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.