• Nov 25 2024

உயர் தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதில் சிக்கல்..! ஆசிரியர் சங்கம் வெளியிட்ட தகவல்

Chithra / May 15th 2024, 3:31 pm
image



கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு முன்னர் உயர் தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதில் பல சிக்கல்கள் நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு முன்னர் உயர் தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்வைத்த யோசனைக்கு அமைய, அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

தற்போது கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி வரும் மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரை மாத்திரம் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும்  பாடசாலை மாணவர்களை, உயர்தரத்திற்காக அருகிலுள்ள பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், 

பாடசாலைகளில் வளங்கள் பற்றாக்குறை காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

உயர் தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதில் சிக்கல். ஆசிரியர் சங்கம் வெளியிட்ட தகவல் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு முன்னர் உயர் தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதில் பல சிக்கல்கள் நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு முன்னர் உயர் தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்வைத்த யோசனைக்கு அமைய, அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.தற்போது கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி வரும் மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.அதனடிப்படையில், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரை மாத்திரம் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும்  பாடசாலை மாணவர்களை, உயர்தரத்திற்காக அருகிலுள்ள பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பாடசாலைகளில் வளங்கள் பற்றாக்குறை காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement