• Nov 07 2024

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி !

Tharmini / Nov 6th 2024, 3:09 pm
image

Advertisement

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

புளோரிடாவில் ஆதரவாளர்களிடையே உரையாற்றும் போதே ட்ரம்ப் தனது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்கா தனக்கு சக்திவாய்ந்த ஆணையை மீண்டும் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக ட்ரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியில் அமர்ந்த ட்ரம்ப் 2020 ஆம் ஆண்டு ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார்.

2020 ஆம் ஆண்டு தோல்விக்கு பின் மீண்டும் களமிறங்கிய ட்ரம்ப் நடந்து முடிந்த தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

ட்ரம்பின் வெற்றியை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள், குடியரசுக் கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் 267 தேர்தல் கல்லூரி வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 224 தேர்தல் கல்லூரி வாக்குகளை பெற்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்தல் கல்லூரி வாக்குகளில் வெற்றிக்கு 270 வாக்குகள் தேவை.

வெற்றி குறித்து ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ட்ரம்ப், இந்த நேரத்தில் உங்கள் மத்தியில் நான் மிகுந்த அன்பை உணர்கிறேன். மேலவையிலும் வெற்றியை பதிவு செய்துள்ளோம், இந்தளவு வெற்றியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அமெரிக்காவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் சட்டப்பூர்வமாக வர வேண்டும். எனக்காக பல பகுதிகளில் பிரசாரம் செய்த எலான் மஸ்கிற்கு நன்றி. துணை அதிபராக தேர்வாகும் ஜேடி வான்ஸ்-க்கு வாழ்த்துகள். அமெரிக்காவை மேலும் சிறந்த நாடாக மாற்ற உழைப்போம் என்றார்.


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். புளோரிடாவில் ஆதரவாளர்களிடையே உரையாற்றும் போதே ட்ரம்ப் தனது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார்.அமெரிக்கா தனக்கு சக்திவாய்ந்த ஆணையை மீண்டும் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக ட்ரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியில் அமர்ந்த ட்ரம்ப் 2020 ஆம் ஆண்டு ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார்.2020 ஆம் ஆண்டு தோல்விக்கு பின் மீண்டும் களமிறங்கிய ட்ரம்ப் நடந்து முடிந்த தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார்.ட்ரம்பின் வெற்றியை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள், குடியரசுக் கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் 267 தேர்தல் கல்லூரி வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 224 தேர்தல் கல்லூரி வாக்குகளை பெற்றுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்தல் கல்லூரி வாக்குகளில் வெற்றிக்கு 270 வாக்குகள் தேவை.வெற்றி குறித்து ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ட்ரம்ப், இந்த நேரத்தில் உங்கள் மத்தியில் நான் மிகுந்த அன்பை உணர்கிறேன். மேலவையிலும் வெற்றியை பதிவு செய்துள்ளோம், இந்தளவு வெற்றியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அமெரிக்காவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் சட்டப்பூர்வமாக வர வேண்டும். எனக்காக பல பகுதிகளில் பிரசாரம் செய்த எலான் மஸ்கிற்கு நன்றி. துணை அதிபராக தேர்வாகும் ஜேடி வான்ஸ்-க்கு வாழ்த்துகள். அமெரிக்காவை மேலும் சிறந்த நாடாக மாற்ற உழைப்போம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement