• Nov 28 2024

உக்ரேன் போர் பதற்றத்திற்குப் பிறகு டிரம்ப் ஸெலென்ஸ்கி இடையே சந்திப்பு!

Tamil nila / Sep 27th 2024, 9:05 pm
image

ரஷ்யாவுடனான மோதலைத் தடுப்பதற்கான ஆற்றலை உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கொண்டிருக்கவில்லை என்று தொடர்ந்து சாடி வந்த அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் அமெரிக்க தேர்தல் வேட்பாளருமான டோனல்ட் டிரம்ப், செப்டம்பர் 27ஆம் திகதி உக்ரேலிய அதிபரைச் சந்திக்கவிருக்கிறார். அது காரசாரமான சந்திப்பாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸெலென்ஸ்கி, ஒரு நாள் முன்னதாக டிரம்பின் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியாளரான கமலா ஹாரிஸ் மற்றும் அதிபர் ஜோ பைடன் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இருவரும் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேன் நடத்தி வரும் போருக்குத் தங்கள் ஆதரவை மறுவுறுதிப்படுத்தினர்.

தி நியூ யார்க்கர் சஞ்சிகையிடம் திரு ஸெலென்ஸ்கி தெரிவித்த கருத்துகளால் கோபம் கொண்ட டிரம்ப் இச்சந்திப்புக்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என்று அமெரிக்க ஊடகங்கள் முன்னர் தெரிவித்தன. அந்தப் பேட்டியில் ஸெலென்ஸ்கி, குடியரசுக் கட்சிக்கு “உண்மையில் போரை நிறுத்துவது எப்படி என்று தெரியவில்லை,” என்று கூறியிருந்தார்.

செப்டம்பர் 25 அன்று வட கரோலைனாவில் நடந்த ஒரு தேர்தல் பிரசாரப் பேரணியில், “ஓரு சமாதான ஒப்பந்தம் செய்ய மறுக்கும் ஒரு நபருக்கு நாங்கள் தொடர்ந்து பில்லியன் கணக்கான டாலரை வழங்குகிறோம், ஸெலென்ஸ்கி,” என்று டிரம்ப் பதிலடி கொடுத்தார்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்ள உக்ரேனிய அதிபர் நியூயார்க் சென்றுள்ளார்.

மாஸ்கோ படையெடுப்பின் மூன்றாம் ஆண்டில் போர்க்களத்தில் போராடிக் கொண்டிருக்கும் ஸெலென்ஸ்கி, ​​தனது தனது நாட்டின் போர் முயற்சிக்கு ஆதரவைத் திரட்டவும் பார்க்கிறார்.

செப்டம்பர் 26 அன்று வெள்ளை மாளிகையில் பைடன், ஹாரிஸ் ஆகியோருக்கு ‘வெற்றி’ என்று அழைக்கப்படும் திட்டத்தை உக்ரேனிய அதிபர் வழங்கினார். பைடன் கியவுக்கு கிட்டத்தட்ட 8 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள புதிய ராணுவ உதவித் தொகுப்பை அறிவித்தார். 





உக்ரேன் போர் பதற்றத்திற்குப் பிறகு டிரம்ப் ஸெலென்ஸ்கி இடையே சந்திப்பு ரஷ்யாவுடனான மோதலைத் தடுப்பதற்கான ஆற்றலை உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கொண்டிருக்கவில்லை என்று தொடர்ந்து சாடி வந்த அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் அமெரிக்க தேர்தல் வேட்பாளருமான டோனல்ட் டிரம்ப், செப்டம்பர் 27ஆம் திகதி உக்ரேலிய அதிபரைச் சந்திக்கவிருக்கிறார். அது காரசாரமான சந்திப்பாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஸெலென்ஸ்கி, ஒரு நாள் முன்னதாக டிரம்பின் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியாளரான கமலா ஹாரிஸ் மற்றும் அதிபர் ஜோ பைடன் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இருவரும் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேன் நடத்தி வரும் போருக்குத் தங்கள் ஆதரவை மறுவுறுதிப்படுத்தினர்.தி நியூ யார்க்கர் சஞ்சிகையிடம் திரு ஸெலென்ஸ்கி தெரிவித்த கருத்துகளால் கோபம் கொண்ட டிரம்ப் இச்சந்திப்புக்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என்று அமெரிக்க ஊடகங்கள் முன்னர் தெரிவித்தன. அந்தப் பேட்டியில் ஸெலென்ஸ்கி, குடியரசுக் கட்சிக்கு “உண்மையில் போரை நிறுத்துவது எப்படி என்று தெரியவில்லை,” என்று கூறியிருந்தார்.செப்டம்பர் 25 அன்று வட கரோலைனாவில் நடந்த ஒரு தேர்தல் பிரசாரப் பேரணியில், “ஓரு சமாதான ஒப்பந்தம் செய்ய மறுக்கும் ஒரு நபருக்கு நாங்கள் தொடர்ந்து பில்லியன் கணக்கான டாலரை வழங்குகிறோம், ஸெலென்ஸ்கி,” என்று டிரம்ப் பதிலடி கொடுத்தார்.ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்ள உக்ரேனிய அதிபர் நியூயார்க் சென்றுள்ளார்.மாஸ்கோ படையெடுப்பின் மூன்றாம் ஆண்டில் போர்க்களத்தில் போராடிக் கொண்டிருக்கும் ஸெலென்ஸ்கி, ​​தனது தனது நாட்டின் போர் முயற்சிக்கு ஆதரவைத் திரட்டவும் பார்க்கிறார்.செப்டம்பர் 26 அன்று வெள்ளை மாளிகையில் பைடன், ஹாரிஸ் ஆகியோருக்கு ‘வெற்றி’ என்று அழைக்கப்படும் திட்டத்தை உக்ரேனிய அதிபர் வழங்கினார். பைடன் கியவுக்கு கிட்டத்தட்ட 8 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள புதிய ராணுவ உதவித் தொகுப்பை அறிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement