• Nov 28 2024

அதிபர் தேர்தலுக்காக பரந்துபட்ட கூட்டணியை அமைக்க முயற்சி! குமார வெல்கம சுட்டிக்காட்டு

Chithra / Mar 10th 2024, 8:48 am
image


பரந்துபட்ட அரசியல் கூட்டணியை அமைப்பது குறித்து கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புதிய சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.

அடுத்து ஜனாதிபதி தேர்தலை முகங்கொடுக்கும் முகமாக பரந்துபட்ட கூட்டணியொன்றை ஸ்தாபிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆலோசனையில், ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க, புதிய கூட்டணியின் ஏற்பாட்டாளர் நிமல் லன்சா, மற்றும் சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆகிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. . 

இந்தத் தரப்பினருடன் இன்னமும் இறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை. 

எனினும் ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் நேர்மறையாக உள்ளன. 

இதேவேளை, அடுத்துவரும் நாட்களில் ஐக்கிய தேசியக்கட்சி, பொதுஜனபெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய தரப்பினருடன் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

என்னைப்பொறுத்தவைரயில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க மீண்டும் ஜனதிபதி பதவிக்காக போட்டியிடுவதற்கு முன்வருவாராக இருந்தால் எமது கூட்டணி அவரை பொதுவேட்பாளராக ஏற்றுக்கொண்டு ஆதரிப்பதற்கு தயாராக உள்ளது.

அவரது முடிவுக்காக காத்திருக்கும் நாம், எமது பொது எதிரியான ஜே.வி.பியை தோற்கடிப்பதிலும் கரிசனைகளைக் கொண்டுள்ளோம் என்றார்.  

அதிபர் தேர்தலுக்காக பரந்துபட்ட கூட்டணியை அமைக்க முயற்சி குமார வெல்கம சுட்டிக்காட்டு பரந்துபட்ட அரசியல் கூட்டணியை அமைப்பது குறித்து கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புதிய சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.அடுத்து ஜனாதிபதி தேர்தலை முகங்கொடுக்கும் முகமாக பரந்துபட்ட கூட்டணியொன்றை ஸ்தாபிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆலோசனையில், ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க, புதிய கூட்டணியின் ஏற்பாட்டாளர் நிமல் லன்சா, மற்றும் சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆகிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. . இந்தத் தரப்பினருடன் இன்னமும் இறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை. எனினும் ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் நேர்மறையாக உள்ளன. இதேவேளை, அடுத்துவரும் நாட்களில் ஐக்கிய தேசியக்கட்சி, பொதுஜனபெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய தரப்பினருடன் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.என்னைப்பொறுத்தவைரயில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க மீண்டும் ஜனதிபதி பதவிக்காக போட்டியிடுவதற்கு முன்வருவாராக இருந்தால் எமது கூட்டணி அவரை பொதுவேட்பாளராக ஏற்றுக்கொண்டு ஆதரிப்பதற்கு தயாராக உள்ளது.அவரது முடிவுக்காக காத்திருக்கும் நாம், எமது பொது எதிரியான ஜே.வி.பியை தோற்கடிப்பதிலும் கரிசனைகளைக் கொண்டுள்ளோம் என்றார்.  

Advertisement

Advertisement

Advertisement