போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளைத் தவறாகக் காட்ட நினைக்கும் முயற்சிகள், இலங்கை மக்களின் ஒற்றுமையையும் வலிமையையும் பாதிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பதிவொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர்,
நீண்ட ஆண்டுகளாகத் தொடர்ந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் அமைதியை நிலைநாட்டிய அனைத்து படையினரின் தியாகத்தையும், அவர்களின் துணிவையும் இன்று நாம் மகிழ்வுடன் நினைவுகூருகிறோம்.
உலகின் மிகவும் பயங்கரமான அச்சுறுத்தலுக்கு எதிராக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில், அனைத்து இலங்கையர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் ஒரு மனிதாபிமானப் பணியை இலங்கை முன்னெடுத்தது.
இந்த வரலாற்றுப் பொன்னான தருணத்தை நாம் சிந்திக்கும்போது, போர் காலத்தில் சகிப்புத்தன்மையுடன் துன்பங்களை எதிர்கொண்ட அனைவருக்கும் மரியாதை செலுத்துவது முக்கியமானதொரு கடமையாகும்.
எனினும், இந்த நிகழ்வுகளைத் தவறாகக் காட்ட நினைக்கும் முயற்சிகள், இலங்கை மக்களின் ஒற்றுமையையும் வலிமையையும் பாதிக்கும் என நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார் .
வரலாற்றுப் பொன்னான தருணத்தை தவறாகக் காட்ட முயற்சி நாமல் கருத்து போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளைத் தவறாகக் காட்ட நினைக்கும் முயற்சிகள், இலங்கை மக்களின் ஒற்றுமையையும் வலிமையையும் பாதிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், நீண்ட ஆண்டுகளாகத் தொடர்ந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் அமைதியை நிலைநாட்டிய அனைத்து படையினரின் தியாகத்தையும், அவர்களின் துணிவையும் இன்று நாம் மகிழ்வுடன் நினைவுகூருகிறோம். உலகின் மிகவும் பயங்கரமான அச்சுறுத்தலுக்கு எதிராக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில், அனைத்து இலங்கையர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் ஒரு மனிதாபிமானப் பணியை இலங்கை முன்னெடுத்தது.இந்த வரலாற்றுப் பொன்னான தருணத்தை நாம் சிந்திக்கும்போது, போர் காலத்தில் சகிப்புத்தன்மையுடன் துன்பங்களை எதிர்கொண்ட அனைவருக்கும் மரியாதை செலுத்துவது முக்கியமானதொரு கடமையாகும். எனினும், இந்த நிகழ்வுகளைத் தவறாகக் காட்ட நினைக்கும் முயற்சிகள், இலங்கை மக்களின் ஒற்றுமையையும் வலிமையையும் பாதிக்கும் என நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார் .