• May 17 2024

இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடிய ஆழிப்பேரலை - நாடெங்கிலும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு!

Chithra / Dec 26th 2022, 11:28 am
image

Advertisement

சுனாமி காவுகொண்ட 18வது ஆண்டு இன்று நினைவுகூரப்படுகின்றது. நாடெங்கிலும் இந்த நிகழ்வு இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 2800க்கும் மேற்பட்டவர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில் இன்று அதன் 18வது ஆண்டிநினை நினைவுகூரும் வகையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு, திருச்செந்தூரில் சுனாமி பேரனர்த்தம் காரணமாக இப்பகுதியில் 243 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே சுனாமி ஞாபகார்த்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு –அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் விசேட பூஜைகள் நடாத்தப்பட்டதுடன் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,பிரசன்னா இந்திரகுமார்,பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உயிர்நீர்த்தவர்களின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் உயிர்நீர்த்தவர்களின் உறவினர்கள் உறவுகளின் புகைப்படங்களுக்கு மலர் தூவி கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்கள்.


-

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களிற்கான 18ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று (26.12) இடம்பெற்றது.

பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதான வளாகத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபியில் குறித்த பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவு பேரூரைகளும் இடம்பெற்றது.

குறித்த நினைவு தூபி சுனாமி பேரலை ஏற்பட்டு 31 ஆம் நாளில் நரசிங்கர் ஆலயத்தின் நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்ததுடன்,  இலங்கையில் முதலாவதாக அமைக்கப்பட்ட தூபியாகவும் விளங்குகின்றது.

நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் பி.ஏ. சரத்சந்திர , மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் , மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.கே ரத்நாயக்கே , மதகுருமார்கள், ராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை, தெற்கு தமிழ் பிரதேசசபை மற்றும் செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர்கள்,  முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், நகரசபை உறுப்பினர்கள், நரசிங்கர் ஆலயத்தின் தலைவர்,பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



-

சுனாமி கடற்கோள் அனர்த்தினால் உயிர் நீத்த உறவுகளின் 18 ஆவது நினைவஞ்சலியும் ஆத்மா சாந்தி வேண்டிய பிரார்த்தனை நிகழ்வுகளும் இன்று பாசிக்குடா கடற்கரையில் நடைபெற்றது.

பாசிக்குடா வலம்புரி விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மத வழிபாட்டு நிகழ்வுகளும்  அன்னதானம் வழங்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்தில் சுனாமி பேரலையினால் 512 பேர் உயிர் இழந்தனர்.


-

சுனாமி ஆழிப்பேரலையின் 18 ஆவது வருட நினைவு தினமான இன்று (26) கிண்ணியாவிலும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

கிண்ணியா பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த நினைவு தினமானது கிண்ணியா பீச்சில் உள்ள நினைவு தூபிக்கு முன்னால் பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் இடம்பெற்றது.

இதில் 2004 .12.26 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கான இரு நிமிட மௌன அஞ்சலியும் துஆ பிரார்த்தனையும் இடம் பெற்றது.

இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,கிண்ணியா கிளை உலமா சபை உறுப்பினர்கள்,சூரா சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கிண்ணியா உப்பாறு கடலூர் கோயிலிலும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கான விசேட பூஜை வழிபாடும் கடல் மாதாவுக்கு கடலில் பூ தூவி அஞ்சலி நிகழ்வும் இன்று (26) ஏற்பாடு செய்யப்பட்டது . இதில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


-

சுனாமி ஆழிப்பேரலை 18 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25க்கு ஆழி பேரலை அனர்த்தம் இடம்பெற்றது.

இவ் அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு தமது அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தினர்.

அட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்களின் ஏற்பாட்டில் அட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் அட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என அனைவரும் இதில் கலந்துக்கொண்டனர்.


-

இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடிய ஆழிப்பேரலை - நாடெங்கிலும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு சுனாமி காவுகொண்ட 18வது ஆண்டு இன்று நினைவுகூரப்படுகின்றது. நாடெங்கிலும் இந்த நிகழ்வு இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 2800க்கும் மேற்பட்டவர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில் இன்று அதன் 18வது ஆண்டிநினை நினைவுகூரும் வகையில் நிகழ்வுகள் நடைபெற்றன.மட்டக்களப்பு, திருச்செந்தூரில் சுனாமி பேரனர்த்தம் காரணமாக இப்பகுதியில் 243 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே சுனாமி ஞாபகார்த்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.மட்டக்களப்பு –அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் விசேட பூஜைகள் நடாத்தப்பட்டதுடன் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,பிரசன்னா இந்திரகுமார்,பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதன்போது உயிர்நீர்த்தவர்களின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் உயிர்நீர்த்தவர்களின் உறவினர்கள் உறவுகளின் புகைப்படங்களுக்கு மலர் தூவி கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்கள்.-வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களிற்கான 18ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று (26.12) இடம்பெற்றது.பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதான வளாகத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபியில் குறித்த பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றிருந்தது.இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவு பேரூரைகளும் இடம்பெற்றது.குறித்த நினைவு தூபி சுனாமி பேரலை ஏற்பட்டு 31 ஆம் நாளில் நரசிங்கர் ஆலயத்தின் நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்ததுடன்,  இலங்கையில் முதலாவதாக அமைக்கப்பட்ட தூபியாகவும் விளங்குகின்றது.நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் பி.ஏ. சரத்சந்திர , மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் , மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.கே ரத்நாயக்கே , மதகுருமார்கள், ராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை, தெற்கு தமிழ் பிரதேசசபை மற்றும் செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர்கள்,  முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், நகரசபை உறுப்பினர்கள், நரசிங்கர் ஆலயத்தின் தலைவர்,பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.-சுனாமி கடற்கோள் அனர்த்தினால் உயிர் நீத்த உறவுகளின் 18 ஆவது நினைவஞ்சலியும் ஆத்மா சாந்தி வேண்டிய பிரார்த்தனை நிகழ்வுகளும் இன்று பாசிக்குடா கடற்கரையில் நடைபெற்றது.பாசிக்குடா வலம்புரி விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு மத வழிபாட்டு நிகழ்வுகளும்  அன்னதானம் வழங்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்தில் சுனாமி பேரலையினால் 512 பேர் உயிர் இழந்தனர்.-சுனாமி ஆழிப்பேரலையின் 18 ஆவது வருட நினைவு தினமான இன்று (26) கிண்ணியாவிலும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.கிண்ணியா பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த நினைவு தினமானது கிண்ணியா பீச்சில் உள்ள நினைவு தூபிக்கு முன்னால் பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் இடம்பெற்றது.இதில் 2004 .12.26 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கான இரு நிமிட மௌன அஞ்சலியும் துஆ பிரார்த்தனையும் இடம் பெற்றது.இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,கிண்ணியா கிளை உலமா சபை உறுப்பினர்கள்,சூரா சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.கிண்ணியா உப்பாறு கடலூர் கோயிலிலும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கான விசேட பூஜை வழிபாடும் கடல் மாதாவுக்கு கடலில் பூ தூவி அஞ்சலி நிகழ்வும் இன்று (26) ஏற்பாடு செய்யப்பட்டது . இதில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.-சுனாமி ஆழிப்பேரலை 18 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25க்கு ஆழி பேரலை அனர்த்தம் இடம்பெற்றது.இவ் அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு தமது அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தினர்.அட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்களின் ஏற்பாட்டில் அட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் அட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என அனைவரும் இதில் கலந்துக்கொண்டனர்.-

Advertisement

Advertisement

Advertisement