• May 17 2024

சுரங்கப்பாதை இடிந்து விபத்து- 40 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு ! samugammedia

Tamil nila / Nov 12th 2023, 5:41 pm
image

Advertisement

இந்தியா - வட இந்தியாவில் சாலை சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் குறைந்தது 40 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியின் ஈடுபட்டுள்ளனர்.

“சுமார் 40 முதல் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளனர். இடிபாடுகள் வழியாக ஒக்ஸிஜன் வழங்கப்படுகிறது” என்று இமயமலை மாநிலத்தின் பேரிடர் மீட்பு அதிகாரி துர்கேஷ் ரத்தோடி தெரிவித்துள்ளார்.

கட்டுமானப் பணியின் ஒரு பகுதி சனிக்கிழமை இரவு இடிந்து விழுந்ததாக உத்தர்காசி பொலிஸ் கண்காணிப்பாளர் அர்பன் யதுவன்ஷி தெரிவித்தார்.

சுரங்கப்பாதையின் ஒரு பகுதி பிரம்மாகல்-போல்கானின் சில்க்யாரா பக்கத்தில் தொடக்கப் புள்ளியில் இருந்து சுமார் 200 மீட்டர் முன்னால் உடைந்தது.

இடிபாடுகளுக்குள் 40 பேர் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணிகளை கவனித்து வரும் ஹைடிரோஎலக்டிசிட்டி இன்வெஸ்ட்மென்ட் அண்ட் டெவலப்மென்ட் கம்பெனி லிமிடெட் (HIDCL) அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுரங்கப்பாதையை திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், சுரங்கப்பாதையில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மாநில பேரிடர் மீட்புக் குழு (SDRF) குழு மற்றும் பொலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சுரங்கப்பாதை இடிந்து விபத்து- 40 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு samugammedia இந்தியா - வட இந்தியாவில் சாலை சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் குறைந்தது 40 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்நிலையில், மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியின் ஈடுபட்டுள்ளனர்.“சுமார் 40 முதல் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளனர். இடிபாடுகள் வழியாக ஒக்ஸிஜன் வழங்கப்படுகிறது” என்று இமயமலை மாநிலத்தின் பேரிடர் மீட்பு அதிகாரி துர்கேஷ் ரத்தோடி தெரிவித்துள்ளார்.கட்டுமானப் பணியின் ஒரு பகுதி சனிக்கிழமை இரவு இடிந்து விழுந்ததாக உத்தர்காசி பொலிஸ் கண்காணிப்பாளர் அர்பன் யதுவன்ஷி தெரிவித்தார்.சுரங்கப்பாதையின் ஒரு பகுதி பிரம்மாகல்-போல்கானின் சில்க்யாரா பக்கத்தில் தொடக்கப் புள்ளியில் இருந்து சுமார் 200 மீட்டர் முன்னால் உடைந்தது.இடிபாடுகளுக்குள் 40 பேர் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணிகளை கவனித்து வரும் ஹைடிரோஎலக்டிசிட்டி இன்வெஸ்ட்மென்ட் அண்ட் டெவலப்மென்ட் கம்பெனி லிமிடெட் (HIDCL) அதிகாரிகள் தெரிவித்தனர்.சுரங்கப்பாதையை திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், சுரங்கப்பாதையில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.மாநில பேரிடர் மீட்புக் குழு (SDRF) குழு மற்றும் பொலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement