• Apr 13 2025

கட்டுநாயக்கவில் கஜமுத்துக்களுடன் சிக்கிய இருவர்

Chithra / Jan 28th 2025, 12:08 pm
image


கட்டுநாயக்க, எவரியவத்த பிரதேசத்தில் கஜமுத்துக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை  மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.  

கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நில்லம மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 38 மற்றும் 43 வயதுடையவர்கள் ஆவர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கட்டுநாயக்கவில் கஜமுத்துக்களுடன் சிக்கிய இருவர் கட்டுநாயக்க, எவரியவத்த பிரதேசத்தில் கஜமுத்துக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை  மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.  கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நில்லம மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 38 மற்றும் 43 வயதுடையவர்கள் ஆவர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement