நாட்டின் தெற்கு கடற்பரப்பில், போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட 2 மீன்பிடிப் படகுகளும் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
குறித்த படகுகளில் சுமார் 600க்கும் அதிகமான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் காணப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ரி56 ரக துப்பாக்கிகள் 2, பிஸ்டல் ரக கைத்துப்பாக்கிகள் 8 மற்றும் M16-2 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டை சுற்றியுள்ள தெற்கு ஆழ்கடல் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட கடல்சார் நடவடிக்கையின்போதே இவை கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் தற்போது கடற்படையினரின் பாதுகாப்பில் கரைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாரியளவு போதைப்பொருள், துப்பாக்கிகளுடன் இரண்டு படகுகள் மீட்பு நாட்டின் தெற்கு கடற்பரப்பில், போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட 2 மீன்பிடிப் படகுகளும் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த படகுகளில் சுமார் 600க்கும் அதிகமான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் காணப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.அதன்படி, ரி56 ரக துப்பாக்கிகள் 2, பிஸ்டல் ரக கைத்துப்பாக்கிகள் 8 மற்றும் M16-2 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.இதன்போது, 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாட்டை சுற்றியுள்ள தெற்கு ஆழ்கடல் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட கடல்சார் நடவடிக்கையின்போதே இவை கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் தற்போது கடற்படையினரின் பாதுகாப்பில் கரைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.