• Nov 13 2024

தென் கொரியாவில் மீன்பிடி படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலி!

Tamil nila / Nov 9th 2024, 8:13 am
image

தென் கொரியாவில் மீன்பிடி படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். 

 இந்த விபத்தில் 12 பேர் காணாமல் போயுள்ளதாகக் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 தென்கொரியாவின் ஜெஜூ  தீவிலிருந்து 24 கிலோமீற்றர் தொலைவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

 குறித்த படகில் 16 தென்கொரியப் பிரஜைகளும் 11 வெளிநாட்டவர்களும் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 இதனிடையே, மீட்புப் பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல்  தெரிவித்துள்ளார். 

 இந்த நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் கடலோர காவல்படை, காவல்துறை, தீயணைப்பு படை மற்றும் இராணுவம் ஆகியவற்றின் 11 கப்பல்கள், 9 விமானங்கள் மற்றும் 13 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரியாவில் மீன்பிடி படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலி தென் கொரியாவில் மீன்பிடி படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.  இந்த விபத்தில் 12 பேர் காணாமல் போயுள்ளதாகக் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  தென்கொரியாவின் ஜெஜூ  தீவிலிருந்து 24 கிலோமீற்றர் தொலைவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  குறித்த படகில் 16 தென்கொரியப் பிரஜைகளும் 11 வெளிநாட்டவர்களும் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  இதனிடையே, மீட்புப் பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல்  தெரிவித்துள்ளார்.  இந்த நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் கடலோர காவல்படை, காவல்துறை, தீயணைப்பு படை மற்றும் இராணுவம் ஆகியவற்றின் 11 கப்பல்கள், 9 விமானங்கள் மற்றும் 13 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement