• Sep 21 2024

யாழில் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் நூதனமாக திருடும் கும்பல் – ஒரே நாளில் இரண்டு சம்பவம்..! samugammedia

Chithra / May 5th 2023, 2:00 pm
image

Advertisement

யாழ்ப்பாண மாவட்டத்தில் பயணிகள் போல பாசாங்கு செய்து முச்சக்கரவண்டி சாரதிகளிடம் நூதனமாக பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற இரண்டு சம்பவங்கள் ஒரே நாளில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகளால் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வெவ்வேறாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முச்சக்கர வண்டி சாரதிகள் இருவரும் தெல்லிப்பழை மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று(04) பகல் பருத்தித்துறையில் இருந்து  முச்சக்கர வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி கீரிமலையில் உள்ள காணிகளை பார்ககவென கூறி வந்த ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் குறித்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

கீரிமலையில் முச்சக்கர வண்டி சாரதிக்கு குளிர்பானத்திற்குள் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டு சாரதியிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

அதே கும்பல் மற்றொரு முச்சக்கர வண்டியை கீரிமலையில் இருந்து வாடகைக்கு அமர்த்தி பருத்தித்துறைக்கு செல்லும் வழியில் குறித்த சாரதிக்கும் குளிர்பானத்திற்குள் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டு சாரதியிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நாளில் ஒரே கும்பல் இரு வேறு நூதன திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முச்சக்கரவண்டி சாரதிகள் குறித்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுவது திருட்டுக்களை தடுக்க உதவும் என கூறப்படுகிறது.

யாழில் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் நூதனமாக திருடும் கும்பல் – ஒரே நாளில் இரண்டு சம்பவம். samugammedia யாழ்ப்பாண மாவட்டத்தில் பயணிகள் போல பாசாங்கு செய்து முச்சக்கரவண்டி சாரதிகளிடம் நூதனமாக பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற இரண்டு சம்பவங்கள் ஒரே நாளில் பதிவாகியுள்ளது.இது தொடர்பில் பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகளால் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வெவ்வேறாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.குறித்த முச்சக்கர வண்டி சாரதிகள் இருவரும் தெல்லிப்பழை மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நேற்று(04) பகல் பருத்தித்துறையில் இருந்து  முச்சக்கர வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி கீரிமலையில் உள்ள காணிகளை பார்ககவென கூறி வந்த ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் குறித்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.கீரிமலையில் முச்சக்கர வண்டி சாரதிக்கு குளிர்பானத்திற்குள் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டு சாரதியிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.அதே கும்பல் மற்றொரு முச்சக்கர வண்டியை கீரிமலையில் இருந்து வாடகைக்கு அமர்த்தி பருத்தித்துறைக்கு செல்லும் வழியில் குறித்த சாரதிக்கும் குளிர்பானத்திற்குள் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டு சாரதியிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே நாளில் ஒரே கும்பல் இரு வேறு நூதன திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முச்சக்கரவண்டி சாரதிகள் குறித்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுவது திருட்டுக்களை தடுக்க உதவும் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement