• Nov 25 2024

17 வயது சிறுவன் செலுத்திய கார்- சம்பவ இடத்திலேயே பலியான இரண்டு உயிர்கள்..!!

Tamil nila / May 21st 2024, 8:17 pm
image

சொகுசு கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த  இருவர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின், புணே கல்யாணி நகர் பகுதியில் நேற்று அதிகாலை 3.15 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த காரை செலுத்தியது 17 வயதான சிறுவன் என்பதும் அவர் மதுபோதையில் காரை செலுத்தியும் உறுதியானது.

இதனைத் தொடர்ந்து குறித்த சிறுவன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சிறுவனுக்கு அன்றைய தினமே நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.

வெறும் 14 மணிநேரத்துக்குள் சிறுவனுக்கு பிணை வழங்கப்பட்டது குறித்து சிலர் எதிர்மறையான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

17 வயது சிறுவன் செலுத்திய கார்- சம்பவ இடத்திலேயே பலியான இரண்டு உயிர்கள். சொகுசு கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த  இருவர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.இந்தியாவின், புணே கல்யாணி நகர் பகுதியில் நேற்று அதிகாலை 3.15 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.மேலும் சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த காரை செலுத்தியது 17 வயதான சிறுவன் என்பதும் அவர் மதுபோதையில் காரை செலுத்தியும் உறுதியானது.இதனைத் தொடர்ந்து குறித்த சிறுவன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.சிறுவனுக்கு அன்றைய தினமே நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.வெறும் 14 மணிநேரத்துக்குள் சிறுவனுக்கு பிணை வழங்கப்பட்டது குறித்து சிலர் எதிர்மறையான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement