தெதிகம மற்றும் கிரிந்த பொலிஸ் பிரிவுகளில் நேற்று நீரில் மூழ்கி இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தெதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருகொட ஓயாவில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
ஜயலத்கந்த, தெதிகம பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே காணாமல் போயுள்ளார்.
காணாமற்போன நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கிரிந்த - யோதகண்டிய குளத்தில் நீராடச் சென்ற எல்பிட்டிய, பொரவாகம பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
சுற்றுலாவிற்கு வந்தவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தங்காலை பிரிவு பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீரில் மூழ்கி இருவர் மாயம் - ஒருவர் பலி. தேடுதல் பணிகள் தீவிரம் தெதிகம மற்றும் கிரிந்த பொலிஸ் பிரிவுகளில் நேற்று நீரில் மூழ்கி இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.தெதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருகொட ஓயாவில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.ஜயலத்கந்த, தெதிகம பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே காணாமல் போயுள்ளார்.காணாமற்போன நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை, கிரிந்த - யோதகண்டிய குளத்தில் நீராடச் சென்ற எல்பிட்டிய, பொரவாகம பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.சுற்றுலாவிற்கு வந்தவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தங்காலை பிரிவு பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.