• Jan 08 2025

கொழும்பு - யாழிற்கு இனி மேலதிகமாக இரு புகையிரத சேவை

Chithra / Jan 7th 2025, 2:10 pm
image

 

கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கு மேலதிகமாக இரு புகையிரத சேவையினை  ஆரம்பிக்கவுள்ளதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

நீண்டகாலமாக யாழ் - கொழும்பிற்கு ஒரேயொரு புகையிரத சேவை மட்டும் இடம்பெற்று வருவதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியிருந்தனர். 

இந்நிலையில் இது தொடர்பான பல்வேறு முறைப்பாடுகள் பொதுமக்களினால் என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக ஆராய்ந்திருந்ததுடன், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

எனது வேண்டுகோளிற்கு அமைவாக, 15ம் திகதியில் இருந்து ஒரு புகையிரத சேவையும், 31ம் திகதியில் இருந்து பிறிதொரு புகையிரத சேவையும் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

கொழும்பு - யாழிற்கு இனி மேலதிகமாக இரு புகையிரத சேவை  கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கு மேலதிகமாக இரு புகையிரத சேவையினை  ஆரம்பிக்கவுள்ளதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,நீண்டகாலமாக யாழ் - கொழும்பிற்கு ஒரேயொரு புகையிரத சேவை மட்டும் இடம்பெற்று வருவதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியிருந்தனர். இந்நிலையில் இது தொடர்பான பல்வேறு முறைப்பாடுகள் பொதுமக்களினால் என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.இது தொடர்பாக ஆராய்ந்திருந்ததுடன், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.எனது வேண்டுகோளிற்கு அமைவாக, 15ம் திகதியில் இருந்து ஒரு புகையிரத சேவையும், 31ம் திகதியில் இருந்து பிறிதொரு புகையிரத சேவையும் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement