• Mar 16 2026

யாழில் நேருக்கு நேர் மோதிய இரு மோட்டார் சைக்கிள்! மூவர் படுகாயம்

Chithra / Jan 22nd 2026, 10:58 am
image

 யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற  விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.


குடத்தனை - வலிக்கண்டி பகுதியில் இன்று காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்தில் காயமடைந்த மூவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்  


அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மருதங்கேணி பிரதேச செயலக கணக்காளரும், சக உத்தியோகஸ்தரும், மற்றைய மோட்டார் சைக்கிள் சாரதியுமான மூவரே படுகாயமடைந்துள்ளனர்.


சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


யாழில் நேருக்கு நேர் மோதிய இரு மோட்டார் சைக்கிள் மூவர் படுகாயம்  யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற  விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.குடத்தனை - வலிக்கண்டி பகுதியில் இன்று காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் காயமடைந்த மூவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்  அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மருதங்கேணி பிரதேச செயலக கணக்காளரும், சக உத்தியோகஸ்தரும், மற்றைய மோட்டார் சைக்கிள் சாரதியுமான மூவரே படுகாயமடைந்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement