• Oct 30 2024

“குடு” போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது! SamugamMedia

Chithra / Feb 27th 2023, 9:49 pm
image

Advertisement

“குடு” போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர். 

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் போதைபொருள் விற்பனை இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவலிற்கமைய குறித்த பகுதியில் உள்ள வீடொன்றினை சோதனையிட்ட பொலிசார் அங்கு 10 கிராம் “குடு” போதைப்பொருளை மீட்டனர்.

குறித்த போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதேபகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரும் 26 வயதுடைய ஆண் ஒருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

குறித்த கைது நடவடிக்கையானது வவுனியா தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஏ.எஸ்.ஜெயக்கொடியின் வழகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர்களான மதுசங்க மற்றும் நிஷன்சலா  மற்றும் பொலிஸ் சார்ஜன்களான 14692 ஹேரத், மஞ்சுலா 36561 , பொலிஸ் கொஸ்தாபல்களான 46353 விதானகே, ஜமிந்த 82175 ,மிதுசன் 91800 , பெண் பொலிஸ் கொஸ்தாபல் 10706 ஜதுனி ஆகியோரை உள்ளடக்கிடய பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

“குடு” போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது SamugamMedia “குடு” போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர். வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் போதைபொருள் விற்பனை இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவலிற்கமைய குறித்த பகுதியில் உள்ள வீடொன்றினை சோதனையிட்ட பொலிசார் அங்கு 10 கிராம் “குடு” போதைப்பொருளை மீட்டனர்.குறித்த போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதேபகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரும் 26 வயதுடைய ஆண் ஒருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த கைது நடவடிக்கையானது வவுனியா தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஏ.எஸ்.ஜெயக்கொடியின் வழகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர்களான மதுசங்க மற்றும் நிஷன்சலா  மற்றும் பொலிஸ் சார்ஜன்களான 14692 ஹேரத், மஞ்சுலா 36561 , பொலிஸ் கொஸ்தாபல்களான 46353 விதானகே, ஜமிந்த 82175 ,மிதுசன் 91800 , பெண் பொலிஸ் கொஸ்தாபல் 10706 ஜதுனி ஆகியோரை உள்ளடக்கிடய பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement