• Dec 12 2024

தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்க கோரி பிரித்தானிய பிரதமருக்கு இருவேறு மனுக்கள்!

Tamil nila / May 24th 2024, 10:50 pm
image

 இலங்கையில்  நடந்த ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் உச்சமான மே 18 அவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகளின் போது, பிரித்தானிய பிரதமரிடன் இரு அமைப்புக்களால் இருவேறு மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 

முதல் மனுவானது,  இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதி்ராக நடாத்தப்பட்டது மற்றும் நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பது திட்டமிட்ட இனப்படுகொலையே என்பதை பிரித்தானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இனப் படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (International Centre for Prevention and prosecution of Genocide (ICPPG)) என்ற அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 



இதனை செயற்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுமான மனுமயூரன் கிருபானந்தா மனுநீதி, சசிகரன் செல்வசுந்தரம், கஜானன் சுந்தரலிங்கம், றோய் ஜக்சன் ஜேசுதாசன், துஷானி இராஜவரோதயம் மற்றும் சுபமகிஷா வரதராஜா ஆகியோர்  சமர்ப்பித்தனர்.

இந்த மனுவில், கனடாவில் இடம்பெற்றதை போல, பிரித்தானிய பாராளுமன்றமும் சிறிலங்காவால் இழைக்கப்படுவது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என்பதை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு தீர்ப்பாயமொன்று அவசியமெனில், அதனை உள்ளக ரீதியிலோ அல்லது ஏனைய நாடுகளுடன் இணைந்தோ நிறுவவேண்டும் என்றும் இந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது மனுவானது,  இலங்கையில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் புலம்பெயர் உறவுகளின் சங்கத்தினரால் (Association of Exiled Relatives of the Enforced Disappearances in Sri Lanka - United Kingdom (AERED-UK)) கையளிக்கப்பட்டது. இம் மனுவிலும் இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்கும்படியும், இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா, முன்னாள்  இலங்கை ஐனாதிபதிகள் மகிந்த ராஐபக்‌ஷ மற்றும் கோத்தபாய  ராஐபக்‌ஷ உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளை பின்பற்றி பிரித்தானிய அரசாங்கம் தடைவிதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இம்மனுவினை,  இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பி்ரித்தானியா வாழ் உறவுகள் கையளித்தனர். குறிப்பாக, 18 மே 2009 வெள்ளைக்கொடியுடன் வண.பிதா.பிரான்சிஸ் தலைமையில் சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களான தமிழீழ காவல்துறையின் இரண்டாவது பொறுப்பாளரான மாதவன் மாஸ்டர்

அவர்களின் மகனான புகழினியன் விக்டர் விமலசிங்கம், நீதிநிர்வாகதுறை பொறுப்பாளர் பரா அவர்களுடைய பேரனாகிய ஈஸ்வரன் ஜெனார்த்தனன், கேணல் கண்ணன் அவர்களின் மகனான உதயராஜா பவசுதன், போராளியான யூக்சின் வினோஜினி அந்தோனிப்பிள்ளை அவர்களின் சகோதரியாகிய மேரி யூலியானா சசிகரன் மற்றும் அஹிதர் பாலசுப்பிரமணியம் அவர்களின் தம்பியான அனுஷன் பாலசுப்பிரமணியம் ஆகியோர் நேரடியாக பிரதமர் அலுவலகத்தில் கையளித்தனர்.

தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்க கோரி பிரித்தானிய பிரதமருக்கு இருவேறு மனுக்கள்  இலங்கையில்  நடந்த ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் உச்சமான மே 18 அவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகளின் போது, பிரித்தானிய பிரதமரிடன் இரு அமைப்புக்களால் இருவேறு மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதல் மனுவானது,  இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதி்ராக நடாத்தப்பட்டது மற்றும் நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பது திட்டமிட்ட இனப்படுகொலையே என்பதை பிரித்தானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இனப் படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (International Centre for Prevention and prosecution of Genocide (ICPPG)) என்ற அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை செயற்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுமான மனுமயூரன் கிருபானந்தா மனுநீதி, சசிகரன் செல்வசுந்தரம், கஜானன் சுந்தரலிங்கம், றோய் ஜக்சன் ஜேசுதாசன், துஷானி இராஜவரோதயம் மற்றும் சுபமகிஷா வரதராஜா ஆகியோர்  சமர்ப்பித்தனர்.இந்த மனுவில், கனடாவில் இடம்பெற்றதை போல, பிரித்தானிய பாராளுமன்றமும் சிறிலங்காவால் இழைக்கப்படுவது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என்பதை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு தீர்ப்பாயமொன்று அவசியமெனில், அதனை உள்ளக ரீதியிலோ அல்லது ஏனைய நாடுகளுடன் இணைந்தோ நிறுவவேண்டும் என்றும் இந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இரண்டாவது மனுவானது,  இலங்கையில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் புலம்பெயர் உறவுகளின் சங்கத்தினரால் (Association of Exiled Relatives of the Enforced Disappearances in Sri Lanka - United Kingdom (AERED-UK)) கையளிக்கப்பட்டது. இம் மனுவிலும் இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்கும்படியும், இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா, முன்னாள்  இலங்கை ஐனாதிபதிகள் மகிந்த ராஐபக்‌ஷ மற்றும் கோத்தபாய  ராஐபக்‌ஷ உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளை பின்பற்றி பிரித்தானிய அரசாங்கம் தடைவிதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இம்மனுவினை,  இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பி்ரித்தானியா வாழ் உறவுகள் கையளித்தனர். குறிப்பாக, 18 மே 2009 வெள்ளைக்கொடியுடன் வண.பிதா.பிரான்சிஸ் தலைமையில் சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களான தமிழீழ காவல்துறையின் இரண்டாவது பொறுப்பாளரான மாதவன் மாஸ்டர்அவர்களின் மகனான புகழினியன் விக்டர் விமலசிங்கம், நீதிநிர்வாகதுறை பொறுப்பாளர் பரா அவர்களுடைய பேரனாகிய ஈஸ்வரன் ஜெனார்த்தனன், கேணல் கண்ணன் அவர்களின் மகனான உதயராஜா பவசுதன், போராளியான யூக்சின் வினோஜினி அந்தோனிப்பிள்ளை அவர்களின் சகோதரியாகிய மேரி யூலியானா சசிகரன் மற்றும் அஹிதர் பாலசுப்பிரமணியம் அவர்களின் தம்பியான அனுஷன் பாலசுப்பிரமணியம் ஆகியோர் நேரடியாக பிரதமர் அலுவலகத்தில் கையளித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement