• Dec 15 2024

சட்ட விரோதமாக ரேஸ் ஓட்டம் - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரு இளைஞர்கள்..!

Tamil nila / Dec 15th 2024, 7:22 pm
image

கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து தலைக்கவசம் அணியாமல் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் ஏ9 வீதியில் இடம்பெற்ற ரேஸ் ஓட்டம் ஒன்றினால்  பாரிய விபத்து  ஏற்பட்டுள்ளது.  

கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம் சந்தியருகில் போடப்பட்டிருந்த பாதச்சாரி  கடவையும் பொறுப்பெடுத்தாமல் சென்றமையால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,, 

குறித்த மோட்டார் சைக்கிள் இரணைமடு பகுதியில் இருந்து வந்த டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு  வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளுடன் மோதி மோட்டார் சைக்கிளின் முன் சக்கரம் மோட்டார் சைக்கிளை விட்டு கழண்டு செல்லும் அளவுக்கு விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இவ் விபத்தில் இரண்டு பேர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அது தீவிர சிகிச்சை பிரிவிலும் ஒருவர் சாதாரண சிகிச்சையிலும் சிகிச்சை பொற்று வருகின்றார்கள்.

அத்துடன் இந்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

சட்ட விரோதமாக ரேஸ் ஓட்டம் - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரு இளைஞர்கள். கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து தலைக்கவசம் அணியாமல் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் ஏ9 வீதியில் இடம்பெற்ற ரேஸ் ஓட்டம் ஒன்றினால்  பாரிய விபத்து  ஏற்பட்டுள்ளது.  கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம் சந்தியருகில் போடப்பட்டிருந்த பாதச்சாரி  கடவையும் பொறுப்பெடுத்தாமல் சென்றமையால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,, குறித்த மோட்டார் சைக்கிள் இரணைமடு பகுதியில் இருந்து வந்த டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு  வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளுடன் மோதி மோட்டார் சைக்கிளின் முன் சக்கரம் மோட்டார் சைக்கிளை விட்டு கழண்டு செல்லும் அளவுக்கு விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் இரண்டு பேர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அது தீவிர சிகிச்சை பிரிவிலும் ஒருவர் சாதாரண சிகிச்சையிலும் சிகிச்சை பொற்று வருகின்றார்கள்.அத்துடன் இந்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement