• May 20 2024

இலங்கையில் இறந்த கணவனின் உடலை பெற போராடும் இரண்டு பெண்கள்! SamugamMedia

Chithra / Mar 24th 2023, 10:01 am
image

Advertisement

அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது.

தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாயின் சடலத்தை பெறுவதற்காக போராடியுள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி 54 வயதான ஓய்வுபெற்ற இராணுவ வீரர் தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை அதிகாரியிடம் முதலில் திருமணம் செய்த மனைவி சாட்சி வழங்கும் போது இரண்டாவது மனைவி விஷம் கொடுத்தமையினால் கணவன் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, விசாரணை மேற்கொள்ளுமாறு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, தம்புத்தேகம பொலிஸார் தம்புத்தேகம நீதவானிடம் அறிக்கை செய்துள்ளனர். மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இரண்டாவது மனைவி திருமணப் பதிவாளர் ஊடாக தனது திருமணத்தை நடத்தி வைத்ததாக தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தம்புத்தேகம நீதவான் உத்தரவிற்கமைய, உயிரிழந்தவருகக்கு பிரேத பரிசோதனை செய்து உடல் உறுப்புகளை மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.


இலங்கையில் இறந்த கணவனின் உடலை பெற போராடும் இரண்டு பெண்கள் SamugamMedia அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது.தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாயின் சடலத்தை பெறுவதற்காக போராடியுள்ளனர்.கடந்த 18ஆம் திகதி 54 வயதான ஓய்வுபெற்ற இராணுவ வீரர் தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.மரண விசாரணை அதிகாரியிடம் முதலில் திருமணம் செய்த மனைவி சாட்சி வழங்கும் போது இரண்டாவது மனைவி விஷம் கொடுத்தமையினால் கணவன் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, விசாரணை மேற்கொள்ளுமாறு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.அதற்கமைய, தம்புத்தேகம பொலிஸார் தம்புத்தேகம நீதவானிடம் அறிக்கை செய்துள்ளனர். மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இரண்டாவது மனைவி திருமணப் பதிவாளர் ஊடாக தனது திருமணத்தை நடத்தி வைத்ததாக தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.தம்புத்தேகம நீதவான் உத்தரவிற்கமைய, உயிரிழந்தவருகக்கு பிரேத பரிசோதனை செய்து உடல் உறுப்புகளை மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement