• Jan 07 2025

கிளிநொச்சியில் கோர விபத்து - இரண்டு வயது குழந்தையை தொடர்ந்து தாயும் உயிரிழப்பு!

Chithra / Jan 3rd 2025, 7:15 am
image


கிளிநொச்சியில் இடம்பெற்ற டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் நேற்றைதினம் உயிரிழந்துள்ளார். 

இதன்போது அன்னை இல்ல வீதி, கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த கஜன் சாளினி (வயது 34) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த நத்தார் தினத்தன்று கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்திற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் நால்வர் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தவேளை இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது.

இந்நிலையில் கணவனும், மனைவியும் ஒரு பிள்ளையும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். மேலதிக சிகிச்சைக்காக மனைவியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அங்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி  (02) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். 

குறித்த விபத்தினை ஏற்படுத்திய டிப்பரின் சாரதி மதுபோதையில் காணப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளி சுமார் 100 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் கோர விபத்து - இரண்டு வயது குழந்தையை தொடர்ந்து தாயும் உயிரிழப்பு கிளிநொச்சியில் இடம்பெற்ற டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் நேற்றைதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது அன்னை இல்ல வீதி, கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த கஜன் சாளினி (வயது 34) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,கடந்த நத்தார் தினத்தன்று கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்திற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் நால்வர் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தவேளை இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது.இந்நிலையில் கணவனும், மனைவியும் ஒரு பிள்ளையும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். மேலதிக சிகிச்சைக்காக மனைவியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அங்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி  (02) உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். குறித்த விபத்தினை ஏற்படுத்திய டிப்பரின் சாரதி மதுபோதையில் காணப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளி சுமார் 100 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement