முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினரும், கண்டி மாவட்ட தலைமை வேட்பாளருமான கே.டி. லால்காந்த கோரியுள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையை உதய கம்மன்பில மறைத்து வைத்திருந்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
அவர்கள் சத்தம் போட்டாலும் போடாவிட்டாலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்க நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புக்கள் மற்றும் மத அமைப்புக்கள் இந்த விடயம் தொடர்பில் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உதய கம்மன்பிலவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் அநுர தரப்பு விடுத்துள்ள கோரிக்கை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினரும், கண்டி மாவட்ட தலைமை வேட்பாளருமான கே.டி. லால்காந்த கோரியுள்ளார்.கண்டியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையை உதய கம்மன்பில மறைத்து வைத்திருந்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.அவர்கள் சத்தம் போட்டாலும் போடாவிட்டாலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்க நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புக்கள் மற்றும் மத அமைப்புக்கள் இந்த விடயம் தொடர்பில் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.