• May 06 2026

பாராளுமன்றம் சென்ற உதய கம்மன்பில

dorin / May 6th 2026, 5:56 pm
image

சர்ச்சைக்குரிய வகையில் 323 கொள்கலன்கள் இலங்கை சுங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்திருந்த பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இன்று (05) பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார். 

இந்தச் சம்பவம் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் முன்னிலையில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் வருகை தந்திருந்தார். 

அமைச்சர் ஹர்ஷன நானாயக்காரவின் தலைமையில் கூடிய இந்தக் குழுவின் முன்னிலையில் தாம் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவித்தார். 

எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் அதிக பொறுப்புடைய ஜனாதிபதி, துறைமுக விவகார அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள இந்தக் குழு தீர்மானிக்கவில்லை என உதய கம்மன்பில குறிப்பிட்டார். 

அவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளாதது, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றம் சென்ற உதய கம்மன்பில சர்ச்சைக்குரிய வகையில் 323 கொள்கலன்கள் இலங்கை சுங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்திருந்த பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இன்று (05) பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார். இந்தச் சம்பவம் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் முன்னிலையில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் வருகை தந்திருந்தார். அமைச்சர் ஹர்ஷன நானாயக்காரவின் தலைமையில் கூடிய இந்தக் குழுவின் முன்னிலையில் தாம் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவித்தார். எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் அதிக பொறுப்புடைய ஜனாதிபதி, துறைமுக விவகார அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள இந்தக் குழு தீர்மானிக்கவில்லை என உதய கம்மன்பில குறிப்பிட்டார். அவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளாதது, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement