• Oct 18 2024

தமிழர் பகுதியில் 16 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மாமா: நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய அதிரடி தீர்ப்பு samugammedia

Chithra / Apr 4th 2023, 9:10 pm
image

Advertisement

வவுனியா - மாங்குளம் பகுதியில் 16வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் 5 லட்சம் ரூபாய் நட்டஈடும், கட்டதவறும் பட்சத்தில் இரு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

இவ்வழக்கு விசாரணை இன்று (04.04.2023) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு மாசி மாதம் மாங்குளம் பகுதியில் இக்குற்றச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சமுதாய கலாசார விழுமியங்கள் அனைத்தையும் சீரழித்து 16 வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வு புரிந்து குழந்தை ஒன்று பெறுவதற்கு காரணமாய் இருந்த சிறுமியின் தந்தையின் சகோதரியின் கணவரான மாமா முறையிலான குற்றவாளிக்கே மேற்படி தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

மரபணு பரிசோதனை அறிக்கையின் படி, பிறந்த ஆண்குழந்தையின் விஞ்ஞான ரீதியிலான தந்தை குற்றவாளியான மாமன் தான் என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இன்று வவுனியா மேல் நீதிமன்றினால் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

தமிழர் பகுதியில் 16 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மாமா: நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய அதிரடி தீர்ப்பு samugammedia வவுனியா - மாங்குளம் பகுதியில் 16வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் 5 லட்சம் ரூபாய் நட்டஈடும், கட்டதவறும் பட்சத்தில் இரு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.இவ்வழக்கு விசாரணை இன்று (04.04.2023) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.2012ஆம் ஆண்டு மாசி மாதம் மாங்குளம் பகுதியில் இக்குற்றச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.சமுதாய கலாசார விழுமியங்கள் அனைத்தையும் சீரழித்து 16 வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வு புரிந்து குழந்தை ஒன்று பெறுவதற்கு காரணமாய் இருந்த சிறுமியின் தந்தையின் சகோதரியின் கணவரான மாமா முறையிலான குற்றவாளிக்கே மேற்படி தண்டணை வழங்கப்பட்டுள்ளது.மரபணு பரிசோதனை அறிக்கையின் படி, பிறந்த ஆண்குழந்தையின் விஞ்ஞான ரீதியிலான தந்தை குற்றவாளியான மாமன் தான் என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இன்று வவுனியா மேல் நீதிமன்றினால் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement