• Oct 19 2024

தொழிற்சங்க தலைவர்கள் அரசியல் நோக்கத்துடன் செயற்படுகின்றனர் - அமைச்சர் மனுச காட்டம்! samugammedia

Tamil nila / Apr 9th 2023, 4:03 pm
image

Advertisement

இலங்கையில் பல ஆண்டுகளாக 40 தொழிலாளர் சட்டங்கள் உள்ளதாகவும், ஆனால் அவற்றில் 16 சட்டங்கள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சொத்துப் பொறுப்புச் சட்டத்தின்படி அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும் சொத்துப் பொறுப்பு அறிக்கையை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் நலன்களுக்காக பிள்ளைகளின் கல்வி மற்றும் பொருளாதார நிலையங்களை அடகு வைப்பதை அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக பெண்களுக்கு பகுதி நேர வேலை, இரவில் வேலை செய்ய, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் கூடுதல் நேரம் வேலை செய்ய பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என முன்வைத்த கோரிக்கைகளுக்கு தொழிற்சங்க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அமைச்சர் சட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தற்போதுள்ள சிக்கலான தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக முன்வைக்கப்படும் கூட்டுத் தொழிலாளர் சட்ட முறையின் முதல் வரைவு மே மாதத்திற்குள் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் சுதந்திரமான கருத்துள்ள எவருக்கும் தமது கருத்துக்களை தொழிலாளர் அமைச்சிடம் சமர்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தொழிற்சங்க தலைவர்கள் அரசியல் நோக்கத்துடன் செயற்படுகின்றனர் - அமைச்சர் மனுச காட்டம் samugammedia இலங்கையில் பல ஆண்டுகளாக 40 தொழிலாளர் சட்டங்கள் உள்ளதாகவும், ஆனால் அவற்றில் 16 சட்டங்கள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.சொத்துப் பொறுப்புச் சட்டத்தின்படி அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும் சொத்துப் பொறுப்பு அறிக்கையை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அரசியல் நலன்களுக்காக பிள்ளைகளின் கல்வி மற்றும் பொருளாதார நிலையங்களை அடகு வைப்பதை அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக பெண்களுக்கு பகுதி நேர வேலை, இரவில் வேலை செய்ய, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் கூடுதல் நேரம் வேலை செய்ய பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என முன்வைத்த கோரிக்கைகளுக்கு தொழிற்சங்க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அமைச்சர் சட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, தற்போதுள்ள சிக்கலான தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக முன்வைக்கப்படும் கூட்டுத் தொழிலாளர் சட்ட முறையின் முதல் வரைவு மே மாதத்திற்குள் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார மேலும் தெரிவித்தார்.தொழிற்சங்கங்கள், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் சுதந்திரமான கருத்துள்ள எவருக்கும் தமது கருத்துக்களை தொழிலாளர் அமைச்சிடம் சமர்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement