• Sep 21 2024

ஒற்றையாட்சிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது! - பஸில்

Chithra / Dec 16th 2022, 11:27 am
image

Advertisement

13 பிளஸ் யோசனையால் இலங்கையின் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

'ஒற்றையாட்சியையே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்கின்றது. எல்லை மீறிய அதிகாரப் பகிர்வை எதிர்ப்பீர்களா?' என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பஸில் ராஜபக்ச இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"13 பிளஸ் என்ற யோசனையை மஹிந்த ராஜபக்சவே முதன் முதலில் முன்வைத்தார். அதன்மூலம் நாட்டின் ஒற்றையாட்சி உறுதிப்படுத்தப்பட்டது. சொல்லளவில் இருந்த ஒற்றையாட்சியை மஹிந்த ராஜபக்சவே நிஜமாக்கினார்.

நாட்டின் தேசியக் கொடியை எங்கு வேண்டுமானாலும் ஏற்றக்கூடிய சூழ்நிலையை உருவாக்கினார். ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள்ளேயே நடவடிக்கை இடம்பெறும்" - என்றார்.

ஒற்றையாட்சிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது - பஸில் 13 பிளஸ் யோசனையால் இலங்கையின் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.'ஒற்றையாட்சியையே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்கின்றது. எல்லை மீறிய அதிகாரப் பகிர்வை எதிர்ப்பீர்களா' என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பஸில் ராஜபக்ச இதனைக் கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:-"13 பிளஸ் என்ற யோசனையை மஹிந்த ராஜபக்சவே முதன் முதலில் முன்வைத்தார். அதன்மூலம் நாட்டின் ஒற்றையாட்சி உறுதிப்படுத்தப்பட்டது. சொல்லளவில் இருந்த ஒற்றையாட்சியை மஹிந்த ராஜபக்சவே நிஜமாக்கினார்.நாட்டின் தேசியக் கொடியை எங்கு வேண்டுமானாலும் ஏற்றக்கூடிய சூழ்நிலையை உருவாக்கினார். ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள்ளேயே நடவடிக்கை இடம்பெறும்" - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement