• Oct 15 2024

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் இராஜினாமா!

Chithra / Oct 15th 2024, 9:30 am
image

Advertisement

 

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆணைக்குழுவில் தங்களுடைய பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர்.

அவர்கள் தங்களது இராஜினாமா கடிதங்களை நேற்று (14) ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிவிப்பை அடுத்து இந்த இராஜினாமாக்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, அதன் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி உடவத்த மற்றும் ஆணையாளர்கள் தங்களின் பதவிகளை இராஜினாமா செய்வதாக எழுத்து மூலம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் அறிவித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டில் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் அதிகாரப்பூர்வ பதவிக்காலம் 2025 மார்ச் மாதத்துடன் நிறைவடைய இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் இராஜினாமா  இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆணைக்குழுவில் தங்களுடைய பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர்.அவர்கள் தங்களது இராஜினாமா கடிதங்களை நேற்று (14) ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிவிப்பை அடுத்து இந்த இராஜினாமாக்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.இதன்படி, ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, அதன் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி உடவத்த மற்றும் ஆணையாளர்கள் தங்களின் பதவிகளை இராஜினாமா செய்வதாக எழுத்து மூலம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் அறிவித்துள்ளனர்.2020 ஆம் ஆண்டில் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் அதிகாரப்பூர்வ பதவிக்காலம் 2025 மார்ச் மாதத்துடன் நிறைவடைய இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement