• Jan 26 2025

யாழ்.பல்கலை பொறியியல் பீடத்தின் "the nail" இதழ் நாளை வெளியீடு!

Chithra / Jan 22nd 2025, 3:05 pm
image

 

யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின்  குடிசார் மற்றும் சுற்றாடல் சங்கத்தின் முயற்சியால் உருவான "the nail an engineer's digest" "ஆணி' இதழ் வெளியீடு நாளையதினம் (23)  இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்கு அறித்துள்ளது. 

யாழ் ஊடக அமையத்தில் இன்று   இடம்பெற்ற ஊடகசந்திப்பின்போதே ஏற்பாட்டுக்குழு குறித்த அறிவித்தலை வெளியிட்டது.

இது தொடர்பில் குறித்த குழு மேலும் தெரிவிக்கையில் -  

2019 இல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முயற்சியால் குறித்த ஆய்வு இதழ் வெளியிடப்பட ஏற்பாடுகள் நடைபெற்றன.

ஆனால் அந்த முயற்சி கொவிட் தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து முதலாவது இதழ் கடந்த 2023 ஆம் ஆண்டு உலக விஞ்ஞானங்கள், திண்மக்கழிவு, தொழில் சார் முயற்சிகள் என பல்வேறு துறைசார் ஆய்வுகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் குறித்த இதழின் ஆக்கங்கள் தொடர்பில் பல்தரப்பினரது விமர்சனங்கள் ஆலோசனைகளுக்கு அமைய 3 ஆவது இதழ்  பாடசாலை மாணவர்களையும் உள்வாங்கி அவர்களது ஆக்கங்களையும் உள்ளடக்கிய வகையில் வரவுள்ளது.

குறிப்பாக கணித எண் தொடர்பான கட்டுரைகள் புதிதாக பல்கலைக்கு செல்லும் மாணவர்களுக்கான ஆலோசனைகள் அடங்கியதாக வலம்வரவுள்ளது.

யாழ் பல்கலையில் எதிர்வரும்  23 ஆம் திகதி நாளையதினம் வெளியிடப்படவுள்ள இந்த இதழின் வெளியீட்டு நிகழ்வில் வடக்கின் ஆளுநர் வேதநாயகன் பிரதம அதிதியாகவும், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


யாழ்.பல்கலை பொறியியல் பீடத்தின் "the nail" இதழ் நாளை வெளியீடு  யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின்  குடிசார் மற்றும் சுற்றாடல் சங்கத்தின் முயற்சியால் உருவான "the nail an engineer's digest" "ஆணி' இதழ் வெளியீடு நாளையதினம் (23)  இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்கு அறித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று   இடம்பெற்ற ஊடகசந்திப்பின்போதே ஏற்பாட்டுக்குழு குறித்த அறிவித்தலை வெளியிட்டது.இது தொடர்பில் குறித்த குழு மேலும் தெரிவிக்கையில் -  2019 இல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முயற்சியால் குறித்த ஆய்வு இதழ் வெளியிடப்பட ஏற்பாடுகள் நடைபெற்றன.ஆனால் அந்த முயற்சி கொவிட் தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.இதையடுத்து முதலாவது இதழ் கடந்த 2023 ஆம் ஆண்டு உலக விஞ்ஞானங்கள், திண்மக்கழிவு, தொழில் சார் முயற்சிகள் என பல்வேறு துறைசார் ஆய்வுகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டது.இந்நிலையில் குறித்த இதழின் ஆக்கங்கள் தொடர்பில் பல்தரப்பினரது விமர்சனங்கள் ஆலோசனைகளுக்கு அமைய 3 ஆவது இதழ்  பாடசாலை மாணவர்களையும் உள்வாங்கி அவர்களது ஆக்கங்களையும் உள்ளடக்கிய வகையில் வரவுள்ளது.குறிப்பாக கணித எண் தொடர்பான கட்டுரைகள் புதிதாக பல்கலைக்கு செல்லும் மாணவர்களுக்கான ஆலோசனைகள் அடங்கியதாக வலம்வரவுள்ளது.யாழ் பல்கலையில் எதிர்வரும்  23 ஆம் திகதி நாளையதினம் வெளியிடப்படவுள்ள இந்த இதழின் வெளியீட்டு நிகழ்வில் வடக்கின் ஆளுநர் வேதநாயகன் பிரதம அதிதியாகவும், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement