• Nov 23 2024

பதுளை பஸ் விபத்தில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவன் -வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்!

Tamil nila / Nov 3rd 2024, 6:17 pm
image

பதுளை பஸ் விபத்தில் சிக்கிக் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஜா - எல, அலெக்சாண்டர் மாவத்தை பகுதியில் வசிக்கும் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே தப்பிச் சென்றுள்ளார்.

இந்த மாணவன் கடந்த முதலாம் திகதி பதுளை, துன்ஹிந்த - அம்பகஹஓய 5ஆவது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்திலேயே சிக்கி காயமடைந்தார்.  

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பதுளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

பதுளை பஸ் விபத்தில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவன் -வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம் பதுளை பஸ் விபத்தில் சிக்கிக் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.ஜா - எல, அலெக்சாண்டர் மாவத்தை பகுதியில் வசிக்கும் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே தப்பிச் சென்றுள்ளார்.இந்த மாணவன் கடந்த முதலாம் திகதி பதுளை, துன்ஹிந்த - அம்பகஹஓய 5ஆவது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்திலேயே சிக்கி காயமடைந்தார்.  இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பதுளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement