தேர்தல்களை எதிர் கொள்வது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி வவுனியாவில் மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை இன்று மேற்கொண்டது.
குறித்த கலந்துரையாடல் தாண்டிக்குளம் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ரவி கருணாநாயக்க கலந்து கொண்டார்.
இதன்போது வன்னித் தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத்தில் அதிக மக்கள் உள்ள நிலையில் இந்த மாவட்டத்தில் சரியான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இதற்காக அடுத்த தேர்தலை சரியாக கையாள்வது தொடர்பில் கருத்துரைத்தார்.
அத்துடன், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி தேர்தல் தொகுதி அமைப்பாளர் ம.மயூரதன், ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட மட்ட உறுப்பினர்கள், பல்வேறு சுயேட்சைக் குழுக்களில் போட்டியிட்டவர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
தேர்தல்களை எதிர்கொள்வது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி வவுனியா மக்களுடன் கலந்துரையாடல் தேர்தல்களை எதிர் கொள்வது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி வவுனியாவில் மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை இன்று மேற்கொண்டது.குறித்த கலந்துரையாடல் தாண்டிக்குளம் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ரவி கருணாநாயக்க கலந்து கொண்டார். இதன்போது வன்னித் தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத்தில் அதிக மக்கள் உள்ள நிலையில் இந்த மாவட்டத்தில் சரியான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இதற்காக அடுத்த தேர்தலை சரியாக கையாள்வது தொடர்பில் கருத்துரைத்தார்.அத்துடன், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி தேர்தல் தொகுதி அமைப்பாளர் ம.மயூரதன், ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட மட்ட உறுப்பினர்கள், பல்வேறு சுயேட்சைக் குழுக்களில் போட்டியிட்டவர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.