• Nov 18 2024

பதிவு செய்யப்படாத வாகனம் மீட்பு; லொஹான் அவரது மனைவிக்கு மீண்டும் விளக்கமறியல்!

Chithra / Nov 18th 2024, 1:07 pm
image

 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட  சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இன்று காலை நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிசம்பர் 2ஆம் திகதி வரையும் அவரது மனைவி நவம்பர் 22 வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

அண்மையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியான ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான மிரிஹான அம்முதெனிய சாலாவ வீதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்படி குறித்த கார் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அது சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட கார் என தெரியவந்துள்ளது.

 சந்தேகநபர்களுக்கான பிணை கோரிக்கையை நிராகரித்த நுகேகொட நீதவான், சந்தேகநபரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை டிசம்பர் 2ஆம் திகதி வரையிலும், சந்தேகநபரான ஷஷி பிரபா ரத்வத்தவை நவம்பர் 22ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பதிவு செய்யப்படாத வாகனம் மீட்பு; லொஹான் அவரது மனைவிக்கு மீண்டும் விளக்கமறியல்  முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட  சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.சந்தேகநபர்கள் இன்று காலை நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிசம்பர் 2ஆம் திகதி வரையும் அவரது மனைவி நவம்பர் 22 வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்அண்மையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியான ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான மிரிஹான அம்முதெனிய சாலாவ வீதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதன்படி குறித்த கார் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அது சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட கார் என தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களுக்கான பிணை கோரிக்கையை நிராகரித்த நுகேகொட நீதவான், சந்தேகநபரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை டிசம்பர் 2ஆம் திகதி வரையிலும், சந்தேகநபரான ஷஷி பிரபா ரத்வத்தவை நவம்பர் 22ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement