• Apr 23 2026

ஈரானின் 'ஏவுகணை நகரங்கள்'மீது அமெரிக்கா தாக்குதல்; இஸ்ரேலை நோக்கி பாய்ந்த ஈரானின் 300 ஏவுகணை

Chithra / Mar 4th 2026, 7:40 am
image

 

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள கூட்டுத் தாக்குதல் 

இன்று  ஐந்தாவது  நாளாக அதிதீவிரமடைந்துள்ளது. 


ஈரானின் இராணுவக் கட்டமைப்பு, தலைமைத்துவம் மற்றும் சர்வதேச டிஜிட்டல் சேவைகள்  என அனைத்து முனைகளிலும் தாக்குதல்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.


ஈரானின் மிகப்பெரிய பலமாக கருதப்படும் பூமிக்கு அடியில் சுமார் 1,600 அடி ஆழத்தில் அமைந்துள்ள 

ஏவுகணை உற்பத்தி ஆலைகளை (Missile Cities) அழிக்க அமெரிக்கா அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

 

சாதாரண குண்டுகளால் அழிக்க முடியாத இந்த ஆழமான தளங்களை அழிக்க, அமெரிக்கா தனது அதிநவீன பி-2 போர் விமானங்கள் மூலம் ஜிபியு-57 (GBU-57) எனப்படும் 'பூமியைத் துளைக்கும்' (Bunker Buster) ராட்சத வெடிகுண்டுகளை வீசி வருகிறது.


டெஹ்ரான், கெர்மன் ஷா மற்றும் செம்னான் ஆகிய பகுதிகளில் உள்ள 5 முக்கிய ஏவுதளங்களை அமெரிக்கா குறிவைத்துள்ளது.


ஈரான் மீதான தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 300 ஈரானிய ஏவுகணை ஏவுதளங்களை முடக்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம்  அறிவித்துள்ளது.


சுமார் 1,600-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மூலம் 24 மணி நேரமும் இடைவிடாது நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், அடுத்த தலைவரைத் தேர்வு செய்ய அதிகாரிகள் கூடியிருந்த கட்டிடத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.


கோம் (Qom) நகரில் உள்ள 'நிபுணர்கள் சபை' கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் ஈரானின் தலைமைத்துவத்தில் பெரும் குழப்பம் நிலவுகிறது.


தற்போது ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக அயதுல்லா அலி ரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளார்.


ஈரானின் பதிலடி தாக்குதலில்  போரின் பாதிப்பு டிஜிட்டல் உலகிலும் எதிரொலித்துள்ளது. 

உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்கியான அமேசான் (Amazon) நிறுவனத்தின் தரவு மையங்கள் 

மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.


ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டு மையங்களும், பஹ்ரைனில் ஒரு மையமும் பாதிக்கப்பட்டுள்ளன. 

இதனால் மத்திய கிழக்கில் வங்கிச் சேவைகள், இணையத்தளங்கள் மற்றும் செயலிகள் முடங்கியுள்ளன.

ஈரானிய ரெட் கிரசண்ட் அமைப்பின் படி, இதுவரை வான்வழித் தாக்குதல்களில் 

787 பேர் உயிரிழந்துள்ளனர். 153 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பெண்கள் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு அரசுத் தொலைக்காட்சியில் உருக்கமாக ஒளிபரப்பப்பட்டது. மக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.


ஈரான் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகள் வெளியான போதும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதனைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.


"அவர்களது வான் பாதுகாப்பு, விமானப்படை, கடற்படை மற்றும் தலைமைத்துவம் அனைத்தும் இப்போது முடிவுக்கு வந்துவிட்டன. இப்போது அவர்கள் பேச விரும்புகிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், 'காலம் கடந்துவிட்டது' (Too Late!)." என தெரிவித்துள்ளார். 



போர்ச் சூழல் மற்றும் உணவுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அனைத்து வகையான உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிக்கு ஈரான் தடை விதித்துள்ளது.


அணுசக்தி தளத்தின் நுழைவு வாயில் சேதமடைந்துள்ளதை சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், அங்கு அணு கதிர்வீச்சு அபாயம் எதுவும் தற்போது இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வளவு பதற்றங்களுக்கு மத்தியிலும், நாட்டின் அன்றாடச் செயல்பாடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் 

வழமை போல் நடப்பதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்கள் தொடருமானால், மத்திய கிழக்கில் உள்ள அனைத்து பொருளாதார மையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.


தாக்குதல்கள் தொடர்ந்தால் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை ஜெனரல் இப்ராஹிம் ஜப்பாரி எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஈரானின் 'ஏவுகணை நகரங்கள்'மீது அமெரிக்கா தாக்குதல்; இஸ்ரேலை நோக்கி பாய்ந்த ஈரானின் 300 ஏவுகணை  மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள கூட்டுத் தாக்குதல் இன்று  ஐந்தாவது  நாளாக அதிதீவிரமடைந்துள்ளது. ஈரானின் இராணுவக் கட்டமைப்பு, தலைமைத்துவம் மற்றும் சர்வதேச டிஜிட்டல் சேவைகள்  என அனைத்து முனைகளிலும் தாக்குதல்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.ஈரானின் மிகப்பெரிய பலமாக கருதப்படும் பூமிக்கு அடியில் சுமார் 1,600 அடி ஆழத்தில் அமைந்துள்ள ஏவுகணை உற்பத்தி ஆலைகளை (Missile Cities) அழிக்க அமெரிக்கா அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. சாதாரண குண்டுகளால் அழிக்க முடியாத இந்த ஆழமான தளங்களை அழிக்க, அமெரிக்கா தனது அதிநவீன பி-2 போர் விமானங்கள் மூலம் ஜிபியு-57 (GBU-57) எனப்படும் 'பூமியைத் துளைக்கும்' (Bunker Buster) ராட்சத வெடிகுண்டுகளை வீசி வருகிறது.டெஹ்ரான், கெர்மன் ஷா மற்றும் செம்னான் ஆகிய பகுதிகளில் உள்ள 5 முக்கிய ஏவுதளங்களை அமெரிக்கா குறிவைத்துள்ளது.ஈரான் மீதான தாக்குதல் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 300 ஈரானிய ஏவுகணை ஏவுதளங்களை முடக்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம்  அறிவித்துள்ளது.சுமார் 1,600-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மூலம் 24 மணி நேரமும் இடைவிடாது நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், அடுத்த தலைவரைத் தேர்வு செய்ய அதிகாரிகள் கூடியிருந்த கட்டிடத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.கோம் (Qom) நகரில் உள்ள 'நிபுணர்கள் சபை' கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் ஈரானின் தலைமைத்துவத்தில் பெரும் குழப்பம் நிலவுகிறது.தற்போது ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக அயதுல்லா அலி ரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளார்.ஈரானின் பதிலடி தாக்குதலில்  போரின் பாதிப்பு டிஜிட்டல் உலகிலும் எதிரொலித்துள்ளது. உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்கியான அமேசான் (Amazon) நிறுவனத்தின் தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டு மையங்களும், பஹ்ரைனில் ஒரு மையமும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மத்திய கிழக்கில் வங்கிச் சேவைகள், இணையத்தளங்கள் மற்றும் செயலிகள் முடங்கியுள்ளன.ஈரானிய ரெட் கிரசண்ட் அமைப்பின் படி, இதுவரை வான்வழித் தாக்குதல்களில் 787 பேர் உயிரிழந்துள்ளனர். 153 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பெண்கள் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு அரசுத் தொலைக்காட்சியில் உருக்கமாக ஒளிபரப்பப்பட்டது. மக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.ஈரான் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகள் வெளியான போதும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதனைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்."அவர்களது வான் பாதுகாப்பு, விமானப்படை, கடற்படை மற்றும் தலைமைத்துவம் அனைத்தும் இப்போது முடிவுக்கு வந்துவிட்டன. இப்போது அவர்கள் பேச விரும்புகிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், 'காலம் கடந்துவிட்டது' (Too Late)." என தெரிவித்துள்ளார். போர்ச் சூழல் மற்றும் உணவுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அனைத்து வகையான உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிக்கு ஈரான் தடை விதித்துள்ளது.அணுசக்தி தளத்தின் நுழைவு வாயில் சேதமடைந்துள்ளதை சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், அங்கு அணு கதிர்வீச்சு அபாயம் எதுவும் தற்போது இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வளவு பதற்றங்களுக்கு மத்தியிலும், நாட்டின் அன்றாடச் செயல்பாடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் வழமை போல் நடப்பதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்கள் தொடருமானால், மத்திய கிழக்கில் உள்ள அனைத்து பொருளாதார மையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.தாக்குதல்கள் தொடர்ந்தால் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை ஜெனரல் இப்ராஹிம் ஜப்பாரி எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement