• Sep 22 2024

அமெரிக்க, இந்திய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு! samugammedia

Tamil nila / Sep 29th 2023, 6:30 pm
image

Advertisement

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) இந்திய வெளியுறவு அமைச்சர் S. ஜெய்சங்கருடன் (Jaishankar) பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்காவின் நட்பு நாடுகளான கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அரசதந்திரப் பூசல் நிலவும் வேளையில் அந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கனடிய சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) வான்கூவருக்கு அருகே சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடர்பிருப்பதாக ஒட்டாவா கூறுகிறது.

அது குறித்து அமெரிக்க-இந்தியத் தலைவர்கள் பேசினார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இருவரும் பலதரப்பட்ட அம்சங்கள் குறித்துக் கலந்துரையாடியதாகத் திரு. ஜெய்சங்கர் கூறினார்.

கனடா, தன்னிடம் இருப்பதாகக் கூறும் தடயங்கள் படுகொலைச் சம்பவத்துக்குத் தொடர்புடையதாக இருந்தால் அவற்றை ஆராயப் புதுடில்லி தயாராய் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பதில் கனடாவுடன் ஒத்துழைக்கும்படி இந்தியாவிடம் வலியுறுத்திவருவதாக அமெரிக்கா கூறுகிறது.

முன்னதாகத்  பிளிங்கன், நிச்சயமாக நிஜ்ஜார் கொலை விவகாரம் குறித்து திரு. ஜெய்சங்கரிடம் பேசுவார் என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

அமெரிக்க, இந்திய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு samugammedia அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) இந்திய வெளியுறவு அமைச்சர் S. ஜெய்சங்கருடன் (Jaishankar) பேச்சு நடத்தியுள்ளார்.அமெரிக்காவின் நட்பு நாடுகளான கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே அரசதந்திரப் பூசல் நிலவும் வேளையில் அந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.கனடிய சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) வான்கூவருக்கு அருகே சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடர்பிருப்பதாக ஒட்டாவா கூறுகிறது.அது குறித்து அமெரிக்க-இந்தியத் தலைவர்கள் பேசினார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.இருவரும் பலதரப்பட்ட அம்சங்கள் குறித்துக் கலந்துரையாடியதாகத் திரு. ஜெய்சங்கர் கூறினார்.கனடா, தன்னிடம் இருப்பதாகக் கூறும் தடயங்கள் படுகொலைச் சம்பவத்துக்குத் தொடர்புடையதாக இருந்தால் அவற்றை ஆராயப் புதுடில்லி தயாராய் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பதில் கனடாவுடன் ஒத்துழைக்கும்படி இந்தியாவிடம் வலியுறுத்திவருவதாக அமெரிக்கா கூறுகிறது.முன்னதாகத்  பிளிங்கன், நிச்சயமாக நிஜ்ஜார் கொலை விவகாரம் குறித்து திரு. ஜெய்சங்கரிடம் பேசுவார் என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement