• Nov 22 2024

அமெரிக்க அதிபர் தேர்தல் - நேரடி விவாதத்தில் தடுமாறிய பைடன்...!

Anaath / Jun 29th 2024, 12:43 pm
image

அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தொடர்பின விவாதம் ஒன்றில் அமெரிக்கா வின் தற்போதைய அதிபர் ஜோ   பைடன்தடுமாறியுள்ளார். இந்த விடயம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

ஜோர்ஜியாவில் உள்ள அட்லான்டாவில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தில் டொனால்ட் டிரம்ப், ஜோ 

அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்காக இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தோ்தலில் போட்டியிடவிருக்கும் தற்போதைய அதிபா் ஜோ பைடனுக்கும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே முதல்முறையாக நடைபெற்ற நேரடி விவாதம்  இடம்பெற்றுள்ளது. 

இந்த விவாதத்தில்  பைடன் சரியாக கருத்துகளை முன்வைக்க முடியாமல் தடுமாறியது அவரது ஆதரவாளா்களிடையே அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

81 வயதாகும் ஜோ பைடன் அதிபா் தோ்தல் வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற ஜனநாயகக் கட்சி வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு பெற்று, தோ்தலில் 79 வயது டொனால்ட் டிரம்ப்பை எதிா்கொள்வது உறுதியாகியுள்ளது.

ஏற்கெனவே வயது மூப்பு காரணமாக பல முறை ஜோ பைடனின் பேச்சு தடுமாறுவதாக குற்றஞ்சாட்டப்படும் சூழலில், அடுத்த தோ்தலிலும் அவா் போட்டியிடுவது அமெரிக்காவில் சா்ச்சையை ஏற்படுத்தியது. இத்தனை அதிக வயதில் அவரால் எதிா் வேட்பாளரை எதிா்த்து முழு திறனுடன் பிரசாரம் செய்ய முடியுமா என்று அவரது கட்சியைச் சோ்ந்த ஒரு தரப்பினரே சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

எனினும் கடந்த தோ்தலைப் போலவே டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராவதை ஜோ பைடனால் தடுக்க முடியும் என்று மற்றொரு தரப்பினா் உறுதியாக நம்புகின்றனா்.இந்தச் சூழலில், ஜாா்ஜியா மாகாணம் அட்லான்டாவில் வியாழக்கிழமை பிரபல தொலைகாட்சி ஒன்றிலேயே  இடம்பெற்றது 

குறித்த விவாதத்தின் போதே டிரம்புடனான அந்த விவாதத்தின்போது பல முறை பேச வாா்த்தைகள் இல்லாமல் நீண்ட நேரம் யோசித்தது, புரியாமல் பேசியது, அா்த்தமில்லாமல் பதிலளித்தது போன்ற ஜோ பைடனின் தடுமாற்றங்கள் அவரால் இந்தத் தோ்தலில் மக்களின் வாக்குகளைப் பெற முடியுமா என்ற கவலையை ஜனநாயகக் கட்சியினரிடையே ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் - நேரடி விவாதத்தில் தடுமாறிய பைடன். அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தொடர்பின விவாதம் ஒன்றில் அமெரிக்கா வின் தற்போதைய அதிபர் ஜோ   பைடன்தடுமாறியுள்ளார். இந்த விடயம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஜோர்ஜியாவில் உள்ள அட்லான்டாவில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தில் டொனால்ட் டிரம்ப், ஜோ அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்காக இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தோ்தலில் போட்டியிடவிருக்கும் தற்போதைய அதிபா் ஜோ பைடனுக்கும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே முதல்முறையாக நடைபெற்ற நேரடி விவாதம்  இடம்பெற்றுள்ளது. இந்த விவாதத்தில்  பைடன் சரியாக கருத்துகளை முன்வைக்க முடியாமல் தடுமாறியது அவரது ஆதரவாளா்களிடையே அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.81 வயதாகும் ஜோ பைடன் அதிபா் தோ்தல் வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற ஜனநாயகக் கட்சி வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு பெற்று, தோ்தலில் 79 வயது டொனால்ட் டிரம்ப்பை எதிா்கொள்வது உறுதியாகியுள்ளது.ஏற்கெனவே வயது மூப்பு காரணமாக பல முறை ஜோ பைடனின் பேச்சு தடுமாறுவதாக குற்றஞ்சாட்டப்படும் சூழலில், அடுத்த தோ்தலிலும் அவா் போட்டியிடுவது அமெரிக்காவில் சா்ச்சையை ஏற்படுத்தியது. இத்தனை அதிக வயதில் அவரால் எதிா் வேட்பாளரை எதிா்த்து முழு திறனுடன் பிரசாரம் செய்ய முடியுமா என்று அவரது கட்சியைச் சோ்ந்த ஒரு தரப்பினரே சந்தேகம் எழுப்பியுள்ளனர்.எனினும் கடந்த தோ்தலைப் போலவே டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராவதை ஜோ பைடனால் தடுக்க முடியும் என்று மற்றொரு தரப்பினா் உறுதியாக நம்புகின்றனா்.இந்தச் சூழலில், ஜாா்ஜியா மாகாணம் அட்லான்டாவில் வியாழக்கிழமை பிரபல தொலைகாட்சி ஒன்றிலேயே  இடம்பெற்றது குறித்த விவாதத்தின் போதே டிரம்புடனான அந்த விவாதத்தின்போது பல முறை பேச வாா்த்தைகள் இல்லாமல் நீண்ட நேரம் யோசித்தது, புரியாமல் பேசியது, அா்த்தமில்லாமல் பதிலளித்தது போன்ற ஜோ பைடனின் தடுமாற்றங்கள் அவரால் இந்தத் தோ்தலில் மக்களின் வாக்குகளைப் பெற முடியுமா என்ற கவலையை ஜனநாயகக் கட்சியினரிடையே ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement