• Jul 01 2024

தமிழ் பொது வேட்பாளர் விவகாரம்...!தமிழ் இனம் யார் என்பதை காட்ட சந்தர்ப்பம்...! சிறிதரன் எம்.பி சுட்டிக்காட்டு...!

Sharmi / Jun 29th 2024, 12:44 pm
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதி  தேர்தலில் வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர். எனவே  தமிழ் பொது வேட்பாளரை இறுக பற்றி பிடித்து இந்த மண்ணில்  தமிழ் இனம் யார் என்பதை காட்டும் சந்தர்ப்பம் இதுவே என தமிழரசு கட்சின்பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நேற்றையதினம்(28)  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 2005ம் ஆண்டு ஒருதலைமைத்துவத்திற்கு கீழ் செயற்பட்டு அன்று உலகத்திற்கு ஒரு செய்தி சொல்லப்பட்டது.

சில நாடுகள் அந்த செய்தியை ஜனநாயகத்தை பயன்படுத்த தவறியதாகவும் குற்றம் சுமர்த்துகின்றன.

யுத்தம் முடிந்தவுடன் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்து அவர் தோல்வி அடைந்தார். அதற்கு பிறகு எங்களுக்காக அவர் எதனையும் இதுவரை  கதைக்கவில்லை.

மைத்திரி, மஹிந்த தேர்தலில் போட்டியிட்ட போது இரண்டும் எதிரி, அதில் யாருக்கு ஆதரவளிப்பது என தீர்மானித்து மைத்திரிக்கு ஆதரவளித்தோம். அதிலும் தோற்றோம் அடுத்து சஜீத்துக்கு ஆதரவு அளித்தோம் அங்கும் இராஜதந்திரம் தோல்வியடைந்தது.

நாட்டில் அரகலய போராட்டத்தைத் தொடர்ந்து டலஸ், ரணில் போட்டியிட்டபோது டலஸ்க்கு ஆதரவு அளித்தோம் அங்கும் தோல்வியடைந்தோம். 

மக்களிடத்தில் அபிவிருத்தி தேவையுள்ளது. மேடையில் அதைப்பற்றி நாங்கள் கதைக்கவில்லை. உரிமைக்காகவே மக்கள் என்றும் வாக்களிக்கின்றனர்.எங்கள் சுகபோகத்திற்காக இல்லை. 

15வருட வரலாற்றில் அநுர,சஜித், ரணில் பேசிய வரலாறு இல்லை. ஆனால் இப்பொழுது பேசுகிறார்கள் அவர்களுக்கு தேவை ஏற்பட்டுள்ளது.

தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் நாங்கள் ஏன் பொது வேட்பாளரை இறக்கக்கூடாது.

13ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஜெய் சங்கருடன் கதைத்தோம். 

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் சந்தித்த சஜித் 13ஐ தருவதாக சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

அப்பொழுது தமிழில் கேட்டார் பொலிஸ் அதிகாரமும் இருக்கின்றதா என்று, சஜீத் இங்கே இப்படி சொல்ல மரிக்கார் கொழும்பில் இவ்வாறு சொல்லவில்லை என்கிறார்.

தமிழ் நாட்டில் பொலிஸ், நிதி அதிகாரங்கள் இருக்கு எமக்கு இல்லை. 

வடக்கு மாகாண சபை முறைமை தான் 13. இதில் மாகாணத்தில் தமிழ் பேசும் அதிகாரிகள் இல்லை. 

பொது வேட்பாளரை களமிறக்கும் போது வேட்பாளர்கள் இறங்கி வருவார்கள். 13ஐ விட மேலதிகமாக ஒன்றை தருகின்றோம் என்று சொன்னால் அதைப்பற்றி யோசிப்போம் ஏற்கனவே உள்ள 13 ஐ தருவோம் என்று சொல்கிறார்கள். 

34வருடமாக பொலீஸ் அதிகாரம் இல்லை காணி அதிகாரம் இல்லை மத்திய அரசாங்கம் காணிகளை பிடிக்கிறது. 

சிவாஜிலிங்கம் ஜனாதிபதி வேட்பாளராக  களமிறங்கியபோது அவரை ஒருவரும் கணக்கில் எடுக்கவில்லை. குமார் பொன்னம்பலம் ஒரு இலட்சத்திற்கு மேல் கிடைத்தது. சிங்கள மக்கள் கூட வாக்களிக்கவுள்ளனர்.

எனவே, வரலாறு தந்திருக்கிற சந்தர்ப்பத்தை தவறாது இறுக்கியாக பிடித்து இந்த மண்ணில் நாம் யார் என்பதை காட்டலாம் 

ரணிலுக்கு மஹிந்த ஆதரவு, சஜித் இறங்கி போனால் அநுரவை நம்ப தயாரில்லை எமக்குரிய கருவி தமிழ் பொதுப்வேட்பாளர்.

தேர்தல் விஞ்ஞானபத்தில் எமக்கான தீர்வை வெளியிட்டால் சிங்கள மக்களிடத்தில் செல்வாக்கு இல்லை என்றால் இந்திய, அமெரிக்க,பிரித்தானியா தூதுவருக்கு முன்பாக மறைமுகமாக தீர்வை  எழுதித் தாருங்கள் எனவும் சிறிதரன் தெரிவித்தார்.




தமிழ் பொது வேட்பாளர் விவகாரம்.தமிழ் இனம் யார் என்பதை காட்ட சந்தர்ப்பம். சிறிதரன் எம்.பி சுட்டிக்காட்டு. எதிர்வரும் ஜனாதிபதி  தேர்தலில் வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர். எனவே  தமிழ் பொது வேட்பாளரை இறுக பற்றி பிடித்து இந்த மண்ணில்  தமிழ் இனம் யார் என்பதை காட்டும் சந்தர்ப்பம் இதுவே என தமிழரசு கட்சின்பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவில் நேற்றையதினம்(28)  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.கடந்த 2005ம் ஆண்டு ஒருதலைமைத்துவத்திற்கு கீழ் செயற்பட்டு அன்று உலகத்திற்கு ஒரு செய்தி சொல்லப்பட்டது.சில நாடுகள் அந்த செய்தியை ஜனநாயகத்தை பயன்படுத்த தவறியதாகவும் குற்றம் சுமர்த்துகின்றன.யுத்தம் முடிந்தவுடன் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்து அவர் தோல்வி அடைந்தார். அதற்கு பிறகு எங்களுக்காக அவர் எதனையும் இதுவரை  கதைக்கவில்லை.மைத்திரி, மஹிந்த தேர்தலில் போட்டியிட்ட போது இரண்டும் எதிரி, அதில் யாருக்கு ஆதரவளிப்பது என தீர்மானித்து மைத்திரிக்கு ஆதரவளித்தோம். அதிலும் தோற்றோம் அடுத்து சஜீத்துக்கு ஆதரவு அளித்தோம் அங்கும் இராஜதந்திரம் தோல்வியடைந்தது.நாட்டில் அரகலய போராட்டத்தைத் தொடர்ந்து டலஸ், ரணில் போட்டியிட்டபோது டலஸ்க்கு ஆதரவு அளித்தோம் அங்கும் தோல்வியடைந்தோம். மக்களிடத்தில் அபிவிருத்தி தேவையுள்ளது. மேடையில் அதைப்பற்றி நாங்கள் கதைக்கவில்லை. உரிமைக்காகவே மக்கள் என்றும் வாக்களிக்கின்றனர்.எங்கள் சுகபோகத்திற்காக இல்லை. 15வருட வரலாற்றில் அநுர,சஜித், ரணில் பேசிய வரலாறு இல்லை. ஆனால் இப்பொழுது பேசுகிறார்கள் அவர்களுக்கு தேவை ஏற்பட்டுள்ளது.தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் நாங்கள் ஏன் பொது வேட்பாளரை இறக்கக்கூடாது.13ஐ நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஜெய் சங்கருடன் கதைத்தோம். இந்திய வெளிவிவகார அமைச்சருடன் சந்தித்த சஜித் 13ஐ தருவதாக சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.அப்பொழுது தமிழில் கேட்டார் பொலிஸ் அதிகாரமும் இருக்கின்றதா என்று, சஜீத் இங்கே இப்படி சொல்ல மரிக்கார் கொழும்பில் இவ்வாறு சொல்லவில்லை என்கிறார்.தமிழ் நாட்டில் பொலிஸ், நிதி அதிகாரங்கள் இருக்கு எமக்கு இல்லை. வடக்கு மாகாண சபை முறைமை தான் 13. இதில் மாகாணத்தில் தமிழ் பேசும் அதிகாரிகள் இல்லை. பொது வேட்பாளரை களமிறக்கும் போது வேட்பாளர்கள் இறங்கி வருவார்கள். 13ஐ விட மேலதிகமாக ஒன்றை தருகின்றோம் என்று சொன்னால் அதைப்பற்றி யோசிப்போம் ஏற்கனவே உள்ள 13 ஐ தருவோம் என்று சொல்கிறார்கள். 34வருடமாக பொலீஸ் அதிகாரம் இல்லை காணி அதிகாரம் இல்லை மத்திய அரசாங்கம் காணிகளை பிடிக்கிறது. சிவாஜிலிங்கம் ஜனாதிபதி வேட்பாளராக  களமிறங்கியபோது அவரை ஒருவரும் கணக்கில் எடுக்கவில்லை. குமார் பொன்னம்பலம் ஒரு இலட்சத்திற்கு மேல் கிடைத்தது. சிங்கள மக்கள் கூட வாக்களிக்கவுள்ளனர்.எனவே, வரலாறு தந்திருக்கிற சந்தர்ப்பத்தை தவறாது இறுக்கியாக பிடித்து இந்த மண்ணில் நாம் யார் என்பதை காட்டலாம் ரணிலுக்கு மஹிந்த ஆதரவு, சஜித் இறங்கி போனால் அநுரவை நம்ப தயாரில்லை எமக்குரிய கருவி தமிழ் பொதுப்வேட்பாளர்.தேர்தல் விஞ்ஞானபத்தில் எமக்கான தீர்வை வெளியிட்டால் சிங்கள மக்களிடத்தில் செல்வாக்கு இல்லை என்றால் இந்திய, அமெரிக்க,பிரித்தானியா தூதுவருக்கு முன்பாக மறைமுகமாக தீர்வை  எழுதித் தாருங்கள் எனவும் சிறிதரன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement