அமெரிக்காவின் சமீபத்திய வரி நடவடிக்கைகளால் எழும் சவால்களுக்கு, அரசியல் பிளவுகளுக்கு அப்பால், இலங்கை ஒரு தேசமாக பதிலளிக்க வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்றையதினம்(07) இடம்பெற்ற 'வெற்றி நமதே - ஊர் எமதே' மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"உலகளாவிய புவிசார் அரசியல் சூழலில் தற்போது ஒரு சாதகமற்ற சூழ்நிலை நிலவுகிறது.
எங்கள் ஏற்றுமதியைப் பாதிக்கும் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தைத் தீர்க்க நாங்கள் தீவிரமாக விவாதங்களில் ஈடுபட்டுள்ளோம்.
நிலைமை எதிர்பாராதது என்றாலும், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் நெருக்கடிக்குள் விழ அனுமதிக்காமல் இந்தப் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பதை அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.
"நாம் இதை ஒரு தேசமாக எதிர்கொள்ள வேண்டும். நமது பொருளாதாரம் வலுவான முன்னேற்றத்தைக் காட்டுகிறது. ஆனால் அதைப் பராமரிக்க, இது போன்ற சவால்களை ஒன்றாக எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அனைத்து குடிமக்களும் ஒற்றுமையாக நின்று மேலும் சிக்கல்களைத் தடுக்க பங்களிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.
அமெரிக்க வரி விவகாரம்: சவால்களை ஒன்றாக எதிர்கொள்ள தயார்: ஜனாதிபதி சுட்டிக்காட்டு. அமெரிக்காவின் சமீபத்திய வரி நடவடிக்கைகளால் எழும் சவால்களுக்கு, அரசியல் பிளவுகளுக்கு அப்பால், இலங்கை ஒரு தேசமாக பதிலளிக்க வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.காலியில் நேற்றையதினம்(07) இடம்பெற்ற 'வெற்றி நமதே - ஊர் எமதே' மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"உலகளாவிய புவிசார் அரசியல் சூழலில் தற்போது ஒரு சாதகமற்ற சூழ்நிலை நிலவுகிறது. எங்கள் ஏற்றுமதியைப் பாதிக்கும் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தைத் தீர்க்க நாங்கள் தீவிரமாக விவாதங்களில் ஈடுபட்டுள்ளோம்.நிலைமை எதிர்பாராதது என்றாலும், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் நெருக்கடிக்குள் விழ அனுமதிக்காமல் இந்தப் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பதை அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது."நாம் இதை ஒரு தேசமாக எதிர்கொள்ள வேண்டும். நமது பொருளாதாரம் வலுவான முன்னேற்றத்தைக் காட்டுகிறது. ஆனால் அதைப் பராமரிக்க, இது போன்ற சவால்களை ஒன்றாக எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அனைத்து குடிமக்களும் ஒற்றுமையாக நின்று மேலும் சிக்கல்களைத் தடுக்க பங்களிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.