இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட Beechcraft King Air 360ER விமானமானது அடுத்த வாரம் இலங்கையை வந்தடையும் என அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், போதைப்பொருள் தடுப்பு மற்றும் கடத்தல் மற்றும் கள்ளக்கடத்தலை முறியடித்தல் ஆகிய விடயங்களில் இலங்கையின் திறன்களை அதிகரிக்கும் வகையில் இம்மேம்படுத்தப்பட்ட விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நன்கொடை அமெரிக்க இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேலும் வலுப்படுத்தும் அதேவேளை இந்நாட்டின் கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் இது கணிசமாக மேம்படுத்தும்.
இலங்கை விமானப்படைக்கு எவ்வித செலவுகளுமின்றி, அமெரிக்க அரசினால் வழங்கப்படும் 19 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடைய இம்மானியமானது, விமானம் மற்றும் அதற்கு தேவையான உதவிச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.
இவ்விமானம் அது தொடர்பான அறிமுகம் மற்றும் அதை இயக்குவது தொடர்பான பயிற்சி என்பன நிறைவடைந்த பின்னர், இவ்வாண்டின் பிற்பகுதியில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை விமானப்படைக்கு அமெரிக்கா வழங்கிய விமானம் அடுத்த வாரம் நாட்டுக்கு இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட Beechcraft King Air 360ER விமானமானது அடுத்த வாரம் இலங்கையை வந்தடையும் என அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், போதைப்பொருள் தடுப்பு மற்றும் கடத்தல் மற்றும் கள்ளக்கடத்தலை முறியடித்தல் ஆகிய விடயங்களில் இலங்கையின் திறன்களை அதிகரிக்கும் வகையில் இம்மேம்படுத்தப்பட்ட விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த நன்கொடை அமெரிக்க இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேலும் வலுப்படுத்தும் அதேவேளை இந்நாட்டின் கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் இது கணிசமாக மேம்படுத்தும்.இலங்கை விமானப்படைக்கு எவ்வித செலவுகளுமின்றி, அமெரிக்க அரசினால் வழங்கப்படும் 19 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடைய இம்மானியமானது, விமானம் மற்றும் அதற்கு தேவையான உதவிச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.இவ்விமானம் அது தொடர்பான அறிமுகம் மற்றும் அதை இயக்குவது தொடர்பான பயிற்சி என்பன நிறைவடைந்த பின்னர், இவ்வாண்டின் பிற்பகுதியில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.