• Apr 15 2026

"மலையக அதிகார சபையை" பயன்படுத்துங்கள் - மலையக அரசியல் தலைமை ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை !

Ziya / Dec 8th 2025, 3:07 pm
image

மலையகத்தில் மீள்கட்டுமானப் பணிகளுக்காக நிதி, நிர்வாக, காணி அதிகாரங்களைப் பயன்படுத்தக் கூடிய "மலையக அதிகார சபையை" பயன்படுத்துங்கள் என  மலையக அரசியல் அரங்கம் ஜனாதிபதிக்கு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது.

டித்வா புயலின் தாக்கத்தால் முழு நாடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில், ஏற்கனவே சமூக, பொருளாதார சிக்கலில் தவிக்கும் மலையக மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். 

இலங்கை அரச நிர்வாகப் பொறிமுறையின் கட்டமைப்பு குறைபாடுகள் காரணமாக மலையகப் பெருந் தோட்டப்பகுதிகளில் நாட்டின் ஏனைய பிரதேசங்களைப் போன்று அரச பொது நிர்வாக முறைமை மலையகத்தில் முழுமையாக சென்று சேர்வதில்லை. 

2018 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க சட்டத்தின் படி தேசிய இடர் முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்புள்ள, மலையக மக்களுக்கு பணியாற்றுவதற்கென உருவாக்கப்பட்ட மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை மலையகத்தில் மீள்கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்த முடியும். 

ஆகையால்  ஜனாதிபதியின் பொறுப்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இடர் முகாமைத்துவ நிலையத்தை அதிகார சபையுடன் இணைந்து செயற்படும் வகையில் சுற்றுநிருபத்தை வெளியிட வேண்டும் என மலையக அரசியல் அரங்கம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரியுள்ளது. 

மலையக அரசியல் அரங்கத்தின் சார்பில் மேற்படி கோரிக்கை அடங்கிய கடிதம் ஜனாதிபதி உள்ளிட்ட அரச தரப்பினருக்கு மும்மொழிகளிலும் அனுப்பப்பட்டுள்ளதாக அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: 

நாடளாவிய ரீதியல் ஏற்பட்டிருக்கும் பேர் அனர்த்தத்தில் இருந்து மீண்டெழுவதற்காக  ஜனாதிபதி என்ற வகையிலும் நிதி அமைச்சர் என்ற வகையிலும் குழுக்களையும் சிறப்பு படையணிகளையும் நிதியங்களையும் ஜனாதிபதி அமைத்துவருகிறார். 

இந்த ஏற்பாடுகள் வழமையான அரச நிர்வாக பொறிமுறைகளான கிராம சேவையாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகங்கள் ஊடாகவே மக்களை சென்றடையும்.

மலையகத்தில் இந்த பொது நிர்வாகப் பொறிமுறையில் பாரிய எண்ணிக்கையிலான குறைபாடுகள் காணப்படுகின்றமை பலரும் அறிந்தததே. ஒரு கிராம சேவகர் பிரிவின் கீழ் அல்லது பிரதேச செயலகப்பிரிவின் கீழ் அதிகளவான சனத்தொகை உள்ளடங்குவதால் அரச பொது நிர்வாக சேவைகள் மக்களை முறையாக சென்று சேர்வதில்லை.

இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மலைநாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கென 2018 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்கச் சட்டத்தின்படி உருவாகக்பட்ட அதிகார சபையை பயன்படுத்துவதே இச் சந்தர்ப்பத்தில் பொருத்தமான தீர்வாக அமையும்.

தற்போதைய நிலையில் மலையகத்தில் மீட்பு பணிகளுக்காகவும் மீள்கட்டமாணப் பணிகளுக்காகவும் பெருமளவு நிதி தேவையான நிலையில் நாடாளுமன்றம் ஊடாகவும் நேரடியாக நிதி ஒதுக்கீடுகளைச் செய்யவும் சுயாதீனமாக நிதியினைத் திரட்டி பணியாற்றவும் சட்டப்படியான அதிகாரம் கொண்ட அதிகார சபையை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.

தன்னார்வ நிறுவனங்களும் தனிப்பட்டவர்களும் மலையக மக்களுக்கு என வழங்க முன்வரும் நிதிகளை இதன் மூலம் நேரடியாகப் பயன்படுத்த முடியும். அதே நேரம் காணிகளை கையாளக்கூடிய அதிகாரமும் அதிகார சபைக்கு உள்ளது. 

மறுபுறம் இதுவரை காலமும் அதிகார சபை தனியான அலுவலகத்தையும் பணியாளர்களையும் கொண்டு இயங்காத நிலையும் காணப்படுகின்றது. 

அதனை சரி செய்யும் வகையில் மலையக மாவட்டங்களின் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் பெருந்தோட்ட சமூக தொடர்பாடல் வசதியளிப்பாளர் (PCCF) எனும் பதவிகளில் பணியாற்றும் நூற்றுக்ணக்கான உத்தியோகத்தர்ளை அதிகார சபையின் இணைப்பாளர்களாக நியமிக்க முடியும். 

அவர்கள் கிராம சேவர்களுக்கு பக்கபலமாக இயங்கலாம். அமைச்சர் விஜித்த ஹேரத் உடனான சந்திப்பின் போதும் நாம் இந்த யோசனையை முன்வைத்திருந்தோம்.

மேற்படி ஆலோசனைகள் அடங்கிய கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளோம். 

இந்த காத்திரமான ஆலோசனைகளை வலுப்படுத்தும் வகையில் மலையக மக்கள் மீதான அக்கறையாளர்கள் அனைவரும் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்னகர்த்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.


"மலையக அதிகார சபையை" பயன்படுத்துங்கள் - மலையக அரசியல் தலைமை ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை மலையகத்தில் மீள்கட்டுமானப் பணிகளுக்காக நிதி, நிர்வாக, காணி அதிகாரங்களைப் பயன்படுத்தக் கூடிய "மலையக அதிகார சபையை" பயன்படுத்துங்கள் என  மலையக அரசியல் அரங்கம் ஜனாதிபதிக்கு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது.டித்வா புயலின் தாக்கத்தால் முழு நாடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில், ஏற்கனவே சமூக, பொருளாதார சிக்கலில் தவிக்கும் மலையக மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். இலங்கை அரச நிர்வாகப் பொறிமுறையின் கட்டமைப்பு குறைபாடுகள் காரணமாக மலையகப் பெருந் தோட்டப்பகுதிகளில் நாட்டின் ஏனைய பிரதேசங்களைப் போன்று அரச பொது நிர்வாக முறைமை மலையகத்தில் முழுமையாக சென்று சேர்வதில்லை. 2018 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க சட்டத்தின் படி தேசிய இடர் முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்புள்ள, மலையக மக்களுக்கு பணியாற்றுவதற்கென உருவாக்கப்பட்ட மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை மலையகத்தில் மீள்கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்த முடியும். ஆகையால்  ஜனாதிபதியின் பொறுப்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இடர் முகாமைத்துவ நிலையத்தை அதிகார சபையுடன் இணைந்து செயற்படும் வகையில் சுற்றுநிருபத்தை வெளியிட வேண்டும் என மலையக அரசியல் அரங்கம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரியுள்ளது. மலையக அரசியல் அரங்கத்தின் சார்பில் மேற்படி கோரிக்கை அடங்கிய கடிதம் ஜனாதிபதி உள்ளிட்ட அரச தரப்பினருக்கு மும்மொழிகளிலும் அனுப்பப்பட்டுள்ளதாக அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: நாடளாவிய ரீதியல் ஏற்பட்டிருக்கும் பேர் அனர்த்தத்தில் இருந்து மீண்டெழுவதற்காக  ஜனாதிபதி என்ற வகையிலும் நிதி அமைச்சர் என்ற வகையிலும் குழுக்களையும் சிறப்பு படையணிகளையும் நிதியங்களையும் ஜனாதிபதி அமைத்துவருகிறார். இந்த ஏற்பாடுகள் வழமையான அரச நிர்வாக பொறிமுறைகளான கிராம சேவையாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகங்கள் ஊடாகவே மக்களை சென்றடையும்.மலையகத்தில் இந்த பொது நிர்வாகப் பொறிமுறையில் பாரிய எண்ணிக்கையிலான குறைபாடுகள் காணப்படுகின்றமை பலரும் அறிந்தததே. ஒரு கிராம சேவகர் பிரிவின் கீழ் அல்லது பிரதேச செயலகப்பிரிவின் கீழ் அதிகளவான சனத்தொகை உள்ளடங்குவதால் அரச பொது நிர்வாக சேவைகள் மக்களை முறையாக சென்று சேர்வதில்லை.இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மலைநாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கென 2018 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்கச் சட்டத்தின்படி உருவாகக்பட்ட அதிகார சபையை பயன்படுத்துவதே இச் சந்தர்ப்பத்தில் பொருத்தமான தீர்வாக அமையும்.தற்போதைய நிலையில் மலையகத்தில் மீட்பு பணிகளுக்காகவும் மீள்கட்டமாணப் பணிகளுக்காகவும் பெருமளவு நிதி தேவையான நிலையில் நாடாளுமன்றம் ஊடாகவும் நேரடியாக நிதி ஒதுக்கீடுகளைச் செய்யவும் சுயாதீனமாக நிதியினைத் திரட்டி பணியாற்றவும் சட்டப்படியான அதிகாரம் கொண்ட அதிகார சபையை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.தன்னார்வ நிறுவனங்களும் தனிப்பட்டவர்களும் மலையக மக்களுக்கு என வழங்க முன்வரும் நிதிகளை இதன் மூலம் நேரடியாகப் பயன்படுத்த முடியும். அதே நேரம் காணிகளை கையாளக்கூடிய அதிகாரமும் அதிகார சபைக்கு உள்ளது. மறுபுறம் இதுவரை காலமும் அதிகார சபை தனியான அலுவலகத்தையும் பணியாளர்களையும் கொண்டு இயங்காத நிலையும் காணப்படுகின்றது. அதனை சரி செய்யும் வகையில் மலையக மாவட்டங்களின் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் பெருந்தோட்ட சமூக தொடர்பாடல் வசதியளிப்பாளர் (PCCF) எனும் பதவிகளில் பணியாற்றும் நூற்றுக்ணக்கான உத்தியோகத்தர்ளை அதிகார சபையின் இணைப்பாளர்களாக நியமிக்க முடியும். அவர்கள் கிராம சேவர்களுக்கு பக்கபலமாக இயங்கலாம். அமைச்சர் விஜித்த ஹேரத் உடனான சந்திப்பின் போதும் நாம் இந்த யோசனையை முன்வைத்திருந்தோம்.மேற்படி ஆலோசனைகள் அடங்கிய கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளோம். இந்த காத்திரமான ஆலோசனைகளை வலுப்படுத்தும் வகையில் மலையக மக்கள் மீதான அக்கறையாளர்கள் அனைவரும் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்னகர்த்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement