உடவளவை நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு இன்று (17) 13 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் இடை நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
உடவளவை நீர் வழங்கல் திட்டத்தில் நடைபெறும் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, இந்தத் தற்காலிக நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டவுள்ளது.
அதன்படி, உடவளவை நகரம் மற்றும் RET நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கான நீர் விநியோகம், இன்று காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 13 மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்படும்.
இந்தக் காலகட்டத்தில் நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருத்தம் தெரிவிப்பதோடு, பொதுமக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறது.
தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் - நீர்வெட்டு தொடர்பில் அறிவிப்பு உடவளவை நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு இன்று (17) 13 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் இடை நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.உடவளவை நீர் வழங்கல் திட்டத்தில் நடைபெறும் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, இந்தத் தற்காலிக நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டவுள்ளது.அதன்படி, உடவளவை நகரம் மற்றும் RET நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கான நீர் விநியோகம், இன்று காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 13 மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்படும்.இந்தக் காலகட்டத்தில் நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருத்தம் தெரிவிப்பதோடு, பொதுமக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறது.