அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியதற்காக அமைச்சர் வசந்த சமரசிங்கவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
சுப்ரீம்செட் பற்றிப் பேசுவதன் மூலம் அமைச்சர் வசந்த சமரசிங்க பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு சவால் விடுத்துள்ளார்.
மேலும், "வெளியே பேசுவதற்குப் பதிலாக அமைச்சர் இந்த விடயத்தை அரசாங்கத்திற்குள் விவாதித்து, பிரதமரின் கருத்துகள் குறித்து தனது ஆட்சேபனைகளை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு அமைச்சரவை அமைச்சர் பிரதமருக்கு சவால் விடுவது இதுவே முதல் தடவை.
அதேநேரம் சுப்ரிம் செட் செயற்கை செய்மதி தொடர்பில் அரசாங்கத்துக்குள் மூன்று கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த செயற்கை செய்மதிக்கு அரசாங்கத்தில் இருந்து ஒரு சதமேனும் செலவிடப்படவில்லை என பிரதமர் பாராளுமன்றத்துக்கு தெரித்தார்.
ஆனால் அரசாங்கத்தின் பணம் செலவிடப்படுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார். அதேநேரம் சுப்ரிம் செட் செயற்கை செய்மதி என்ற பெயரில் இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட தலங்களில் செய்மதி ஒன்று இல்லையென அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். இவ்வாறு அரசாங்கத்துக்குள் இருந்து பரஸ்பர விரோதமான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதால் இதன் உண்மை தன்மை என்ன என்பதை அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
வசந்த சமரசிங்கவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் நவீன் திசாநாயக்க ஆதங்கம் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியதற்காக அமைச்சர் வசந்த சமரசிங்கவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.சுப்ரீம்செட் பற்றிப் பேசுவதன் மூலம் அமைச்சர் வசந்த சமரசிங்க பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு சவால் விடுத்துள்ளார். மேலும், "வெளியே பேசுவதற்குப் பதிலாக அமைச்சர் இந்த விடயத்தை அரசாங்கத்திற்குள் விவாதித்து, பிரதமரின் கருத்துகள் குறித்து தனது ஆட்சேபனைகளை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு அமைச்சரவை அமைச்சர் பிரதமருக்கு சவால் விடுவது இதுவே முதல் தடவை.அதேநேரம் சுப்ரிம் செட் செயற்கை செய்மதி தொடர்பில் அரசாங்கத்துக்குள் மூன்று கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த செயற்கை செய்மதிக்கு அரசாங்கத்தில் இருந்து ஒரு சதமேனும் செலவிடப்படவில்லை என பிரதமர் பாராளுமன்றத்துக்கு தெரித்தார்.ஆனால் அரசாங்கத்தின் பணம் செலவிடப்படுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார். அதேநேரம் சுப்ரிம் செட் செயற்கை செய்மதி என்ற பெயரில் இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட தலங்களில் செய்மதி ஒன்று இல்லையென அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். இவ்வாறு அரசாங்கத்துக்குள் இருந்து பரஸ்பர விரோதமான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதால் இதன் உண்மை தன்மை என்ன என்பதை அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.