• Jun 17 2024

12 வீதமாக குறையும் வற் வரி! விலக்கு அளிக்கப்படும் பொருட்கள் - அமைச்சர் அறிவிப்பு

Chithra / May 26th 2024, 2:48 pm
image

Advertisement

 

2027ஆம் ஆண்டு முதல் வற் வரி விகிதத்தை 12 வீதமாகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் 2027ஆம் ஆண்டின் பின்னர் அனைத்து உற்பத்தி, 

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சில்லறை மொத்த விற்பனை வர்த்தகத்தை வற் வரிக்கு உட்படுத்துவதன் மூலம் 2027ஆம் ஆண்டு முதல் வற் வரி விகிதத்தை 12 வீதமாகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அவ்வாறு 2027ம் ஆண்டில் வற் வரி 12 வீதமாகக் குறையும் போது வரியிலிருந்து விடுவிக்கப்படும் பொருட்களின் பட்டியல் ஒன்றும் அனுமதிக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அவற்றுள் அரசி, கோதுமை மாவு, சீனி, தேங்காய், மீன், மரக்கறிகள், பழங்கள், ஆங்கில சிங்களம் மற்றும் யுனானி மருந்து வகைகள், புத்தகங்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கிழங்கு, வெங்காயம், மிளகாய், மஞ்சள், உளுந்து போன்ற அனைத்துப் பொருட்களுக்கும் வற் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

12 வீதமாக குறையும் வற் வரி விலக்கு அளிக்கப்படும் பொருட்கள் - அமைச்சர் அறிவிப்பு  2027ஆம் ஆண்டு முதல் வற் வரி விகிதத்தை 12 வீதமாகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்துள்ளார்.பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.நாட்டின் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் 2027ஆம் ஆண்டின் பின்னர் அனைத்து உற்பத்தி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சில்லறை மொத்த விற்பனை வர்த்தகத்தை வற் வரிக்கு உட்படுத்துவதன் மூலம் 2027ஆம் ஆண்டு முதல் வற் வரி விகிதத்தை 12 வீதமாகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.அவ்வாறு 2027ம் ஆண்டில் வற் வரி 12 வீதமாகக் குறையும் போது வரியிலிருந்து விடுவிக்கப்படும் பொருட்களின் பட்டியல் ஒன்றும் அனுமதிக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அவற்றுள் அரசி, கோதுமை மாவு, சீனி, தேங்காய், மீன், மரக்கறிகள், பழங்கள், ஆங்கில சிங்களம் மற்றும் யுனானி மருந்து வகைகள், புத்தகங்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கிழங்கு, வெங்காயம், மிளகாய், மஞ்சள், உளுந்து போன்ற அனைத்துப் பொருட்களுக்கும் வற் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement