• Feb 14 2025

Tharmini / Dec 26th 2024, 8:00 pm
image

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடுவில் நீர் நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (26) மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர் வவுணதீவு, காந்திநகர் சின்னசிப்பிமடுவைச் சேர்ந்த 51வயதுடைய பொன்னம்பலம் சிங்கநாயகம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த திங்கட்கிழமை காலையில் வீட்டிலிருந்து சென்றவர் இதுவரையில் வீடு செல்லாத நிலையில் உறவினர்கள் தேடிவந்த நிலையில் சடலமாக குறித்த பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்கு வந்த வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் மரண விசாரணைகளை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சடலம் அழுகிய நிலையில் காணப்படுவதுடன் உடலில் சில காயங்களும் காணப்படுவதாக சடலத்தினை பார்வையிட்ட உறவினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிஸ் நிலைய பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.




வவுணதீவு சிப்பிமடுவில் : ஆண் ஒருவரின் சடலம் மீட்பு மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடுவில் நீர் நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (26) மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்டவர் வவுணதீவு, காந்திநகர் சின்னசிப்பிமடுவைச் சேர்ந்த 51வயதுடைய பொன்னம்பலம் சிங்கநாயகம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த திங்கட்கிழமை காலையில் வீட்டிலிருந்து சென்றவர் இதுவரையில் வீடு செல்லாத நிலையில் உறவினர்கள் தேடிவந்த நிலையில் சடலமாக குறித்த பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.குறித்த பகுதிக்கு வந்த வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் மரண விசாரணைகளை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.சடலம் அழுகிய நிலையில் காணப்படுவதுடன் உடலில் சில காயங்களும் காணப்படுவதாக சடலத்தினை பார்வையிட்ட உறவினர்கள் தெரிவித்தனர்.இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிஸ் நிலைய பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement