• Nov 23 2024

வவுனியா - ஈரப்பெரியகுளத்தில் விவசாய அமைப்புக்கான கட்டிடம் வடக்கு ஆளுனரால் திறந்து வைப்பு!

Tamil nila / Jul 22nd 2024, 9:04 pm
image

வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் விவசாய அமைப்புக்கான கட்டிடம் வடக்கு மாகாண ஆளுனர் பீ.எச்.எம்.சாள்ஸ் அவர்களால் இன்று  திறந்து வைக்கப்பட்டது.

குறித்த கட்டிடம் வடமாகாண ஆளுனரால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு விவசாய சங்கத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.  குறித்த நிகழ்வின் நினைவாக மரநடுகையும் இடம்பெற்றது.

சிங்கப்பூர் பௌத்த சங்கத்தின் நிதி உதவியில் ஈரப்பெரியகுளம் விவசாயிகளுக்கு 2000 ஏக்கர் நிலப்பரப்பில் உழுந்து, பயறு, கௌப்பி ஆகிய தானிய  செய்கை மேற்கொள்வதற்கான உதவித் திட்டம் வழங்குவதற்கான செயற்பாடுகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டது.  

குறித்த நிகழ்வில் சிங்கப்பூர் பௌத்த சங்கத்தினர், மதத்தலைவர்கள், சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை மாணவர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 



வவுனியா - ஈரப்பெரியகுளத்தில் விவசாய அமைப்புக்கான கட்டிடம் வடக்கு ஆளுனரால் திறந்து வைப்பு வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் விவசாய அமைப்புக்கான கட்டிடம் வடக்கு மாகாண ஆளுனர் பீ.எச்.எம்.சாள்ஸ் அவர்களால் இன்று  திறந்து வைக்கப்பட்டது.குறித்த கட்டிடம் வடமாகாண ஆளுனரால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு விவசாய சங்கத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.  குறித்த நிகழ்வின் நினைவாக மரநடுகையும் இடம்பெற்றது.சிங்கப்பூர் பௌத்த சங்கத்தின் நிதி உதவியில் ஈரப்பெரியகுளம் விவசாயிகளுக்கு 2000 ஏக்கர் நிலப்பரப்பில் உழுந்து, பயறு, கௌப்பி ஆகிய தானிய  செய்கை மேற்கொள்வதற்கான உதவித் திட்டம் வழங்குவதற்கான செயற்பாடுகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டது.  குறித்த நிகழ்வில் சிங்கப்பூர் பௌத்த சங்கத்தினர், மதத்தலைவர்கள், சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை மாணவர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement