• Sep 19 2024

யாழில் மருந்தகத்தில் இடம்பெற்ற மரண சடங்கு- சுகாதார அதிகாரிகள் விசாரணை!

Tamil nila / Jul 22nd 2024, 9:29 pm
image

Advertisement

யாழில் உள்ள மருந்தகம் ஒன்றில் உயிரிழந்த உறவினர் ஒருவரின் மரணச்சடங்கு இடம்பெற்ற  நிலையில் சுகாதார அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாக,,

யாழில் உள்ள வீடு ஒன்றை தனியார் மருந்தகமாக பதிவு செய்து நடத்தி வர நிலையில் குறித்த மருந்தகத்தின் உறவினர் ஒருவரின் மரணச் சடங்கு குறித்த மருந்தகத்தில் இடம் பற்றுள்ளது.

மருந்துகள் குளிரூட்டப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பாக பேணப்பட வேண்டுமென சுகாதார வழிகாட்டல்கள் குறிப்பிடப்படுகின்ற நிலையில் உயிரிழந்தவரின்  சடலத்தை இரு நாட்களாக குறித்த மருந்தகத்தில் வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

அதுமட்டுமல்லாது மரணச் சடங்கை நடத்துவதற்காக மருந்தகத்தில் இருந்து  சில மருந்துகள் வெளியில் கொண்டு செல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகிறது.

குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உணவு காட்டுப்பாட்டு அதிகாரிகள் குறித்த மருந்தகத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அவர்களின் விசாரணைகளுக்கு அழுத்தங்கள் உயர் அதிகாரிகளால் பிரயோகிக்கப்படுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக் கிடைக்கிறது.

குறித்த விடயம்  தொடர்பில் யாழ் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரனின் என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை.




யாழில் மருந்தகத்தில் இடம்பெற்ற மரண சடங்கு- சுகாதார அதிகாரிகள் விசாரணை யாழில் உள்ள மருந்தகம் ஒன்றில் உயிரிழந்த உறவினர் ஒருவரின் மரணச்சடங்கு இடம்பெற்ற  நிலையில் சுகாதார அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாக,,யாழில் உள்ள வீடு ஒன்றை தனியார் மருந்தகமாக பதிவு செய்து நடத்தி வர நிலையில் குறித்த மருந்தகத்தின் உறவினர் ஒருவரின் மரணச் சடங்கு குறித்த மருந்தகத்தில் இடம் பற்றுள்ளது.மருந்துகள் குளிரூட்டப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பாக பேணப்பட வேண்டுமென சுகாதார வழிகாட்டல்கள் குறிப்பிடப்படுகின்ற நிலையில் உயிரிழந்தவரின்  சடலத்தை இரு நாட்களாக குறித்த மருந்தகத்தில் வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.அதுமட்டுமல்லாது மரணச் சடங்கை நடத்துவதற்காக மருந்தகத்தில் இருந்து  சில மருந்துகள் வெளியில் கொண்டு செல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகிறது.குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உணவு காட்டுப்பாட்டு அதிகாரிகள் குறித்த மருந்தகத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அவர்களின் விசாரணைகளுக்கு அழுத்தங்கள் உயர் அதிகாரிகளால் பிரயோகிக்கப்படுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக் கிடைக்கிறது.குறித்த விடயம்  தொடர்பில் யாழ் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரனின் என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

Advertisement

Advertisement

Advertisement