• Sep 08 2024

வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இடமாற்றம் - சில தினங்களுக்கு சேவைகள் இடை நிறுத்தம்!

Tamil nila / Jul 25th 2024, 7:35 pm
image

Advertisement

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா, வெளிச்சுற்று வீதியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகம், 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் காமினி மகா வித்தியாலத்திற்கு முன்னால் மன்னார் வீதி, வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நிறுவப்படவுள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, வெளிச்சுற்று வீதி, வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள தற்போது பொதுமக்கள் சேவைகளை வழங்கி வரும் பிராந்திய அலுவலகத்தின் உத்தியோகபூர்வக் கடமைகள் 2024 ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையும்.

அதற்கமைய, 2024 ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி முதல் 2024 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரையில் இந்த திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் மூலம் பொதுமக்கள் சேவைகள் மேற்கொள்ளப்படமாட்டாது.

மேற்குறிப்பிடப்பட்ட இடத்தில் நிறுவப்படும் புதிய பிராந்திய அலுவலகத்தின் மூலம் 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் மீண்டும் பொதுமக்கள் சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்த ஊடக அறிக்கையில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இடமாற்றம் - சில தினங்களுக்கு சேவைகள் இடை நிறுத்தம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா, வெளிச்சுற்று வீதியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகம், 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் காமினி மகா வித்தியாலத்திற்கு முன்னால் மன்னார் வீதி, வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நிறுவப்படவுள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.எனவே, வெளிச்சுற்று வீதி, வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள தற்போது பொதுமக்கள் சேவைகளை வழங்கி வரும் பிராந்திய அலுவலகத்தின் உத்தியோகபூர்வக் கடமைகள் 2024 ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையும்.அதற்கமைய, 2024 ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி முதல் 2024 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரையில் இந்த திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் மூலம் பொதுமக்கள் சேவைகள் மேற்கொள்ளப்படமாட்டாது.மேற்குறிப்பிடப்பட்ட இடத்தில் நிறுவப்படும் புதிய பிராந்திய அலுவலகத்தின் மூலம் 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி முதல் மீண்டும் பொதுமக்கள் சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்த ஊடக அறிக்கையில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement