• Nov 26 2024

வடமாகாண மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி- வவுனியா பூம்புகார் மாணவர்கள் பின் தங்கிய நிலையிலும் சாதனை!

Tamil nila / Aug 28th 2024, 10:59 pm
image

2024 ஆண்டு வடமாகாண மெய்வல்லுநர் போட்டிகளில் வவுனியா வடக்கு வலய பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான பூம்புகார் கண்ணகி  வித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.


வவுனியா வடக்கு பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் க.சகிந்தன் 18 வயதுப் பிரிவில் 800 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 1500 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், பா.விழிவண்ணன் 800 மீற்றர், 1500 மீற்றர், 3000 மீற்றர் போட்டிகளில் 3 வெண்கலப்பதக்கங்களைப் பெற்றுள்ளதுடன் அவர் அரைமரதன் போட்டிலும் 3ம் இடத்தினைப் பெற்றுள்ளார்.

இதன் மூலம் பூம்புகார் கண்ணகி வித்தியாலய மாணவர்கள் வலய மட்டத்தில் முதல் நிலைப் பாடசாலையாகவும் திகழ்கின்றது.

மேலும் கிராமப்புறப் பாடசாலையாகவும் பொதுப்பேருந்துச் சேவையற்றதும், பொருளாதாரப் பின்னடைவுமுள்ள இப்பாடசாலையிலிருந்து வடமாகாண வெற்றியாளர்களாவது இலகுவான காரியமில்லை.

வடமாகாண மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி- வவுனியா பூம்புகார் மாணவர்கள் பின் தங்கிய நிலையிலும் சாதனை 2024 ஆண்டு வடமாகாண மெய்வல்லுநர் போட்டிகளில் வவுனியா வடக்கு வலய பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றான பூம்புகார் கண்ணகி  வித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.வவுனியா வடக்கு பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் க.சகிந்தன் 18 வயதுப் பிரிவில் 800 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 1500 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், பா.விழிவண்ணன் 800 மீற்றர், 1500 மீற்றர், 3000 மீற்றர் போட்டிகளில் 3 வெண்கலப்பதக்கங்களைப் பெற்றுள்ளதுடன் அவர் அரைமரதன் போட்டிலும் 3ம் இடத்தினைப் பெற்றுள்ளார்.இதன் மூலம் பூம்புகார் கண்ணகி வித்தியாலய மாணவர்கள் வலய மட்டத்தில் முதல் நிலைப் பாடசாலையாகவும் திகழ்கின்றது.மேலும் கிராமப்புறப் பாடசாலையாகவும் பொதுப்பேருந்துச் சேவையற்றதும், பொருளாதாரப் பின்னடைவுமுள்ள இப்பாடசாலையிலிருந்து வடமாகாண வெற்றியாளர்களாவது இலகுவான காரியமில்லை.

Advertisement

Advertisement

Advertisement